பக்கம்:உருவும் திருவும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழங்கிய வான்மறை 39

நூலில், பரித்த உரையெல்லாம் பரிமேலழகன் தெளித்த உரையாமோ தெளி

என்ற திருக்குறள் உரைச் சிறப்புப் பாயிரத்தாலும் அறியக் கிடக்கின்றது.

திருக்குறள் நான்மறையின் மெய்ப்பொருளை உணர்த்து கிறது என்றும். சுருங்கிய சொற்களால் பொருத்தமுறப் பொருள் விளங்கச் சொல்லுகிறது என்றும், எளிய சொற் களால் அரிய பொருள்களைப் புலப்படுத்துகிறது என்றும், மற்ற நூல்களினும் சிறப்புற்று விளங்குகிறது என்றும், உலக மக்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் இருளை அகற்றும் ஒளி விளக்கு என்றும், தெள்ளமுதின் தீஞ்சுவையைப் பயக்கின்றது என்றும், பலவாருகப் புலவர்கள் பலபடப் பாராட்டிப் புகழ் மாலை சூட்டியுள்ளனர்.

‘காலத்தின் இடையிடையே கவிஞர்கள் தோன்று வார்கள்’ என்கிறார் கவிஞர் ஷெல்லி. அவ்வாறே சிறந்த பல பெருமக்கள் காலத்திற்குக் காலம் தோன்றிக் கருத்து மழை பொழிந்து மக்கட் சமுதாயத்தை நல்ல வழியில் நடாத்திச் சென்றிருக்கின்றனர்; மக்கள் நல்வாழ்வு வாழும் நெறியினை-வாழ்க்கைக் கலையினை-உணர்த்திச் சென்றுள் ளனர். அவர்களில் வள்ளுவர் தலையாய அறிஞராக விளங்கு கின்றார்.

“அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்’ என்பது தமிழ்ச் சான்றாேர் கண்ட உண்மையாகும். அம் முறையில் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பொருள்களை உணர்த்தி அதன்வழி மக்கட்குலம் வீட்டுப் பேற்றினை யடையும் நெறியினை வள்ளுவர் நமக்கு உய்த்துணர்த்துகின்றார். அறத்துப் பாலில் இல்லறம் துறவறம் குறித்தும் தம் அருமை யான கருத்துக்களைத் தந்துள்ளார்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவ தெவன்

என்று இல்லறத்தைப் பாராட்டிய திருவள்ளுவர்,