பக்கம்:உருவும் திருவும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 உருவும் திருவும்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்

என்று துறவறத்தின் மாண்பினையும் புலப்படுத்தியுள்ளார். இல்லறம் எனப்படுவது, இல்வுலகில் ஒருவன் மனைத்தக்க மாண்புடையாள வாழ்க்கைத் துணையாகக் கொண்டு, நல்லற மாம் இல்லறத்திற் கியைந்த செயல்களை நாடோறும் செய்து, மக்கட்பேற்றுடன் மகிழ்ந்து வாழ்தலாகும். துறவறமாவது இவ்வுலகின் நிலையாமை கண்டு பற்றைவிட்டு வனத்தின்கண் சென்று தவத்தை மேற்கொண்டு ஒழுகுதலாகும்.

இதனைத் தொல்காப்பியனர்,

காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி நெஞ்சமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

-தொல்: கற்பியல்: நூ. 51.

என்று இல்லறம் துறவறம் என்ற இரண்டனையும் இணைத்துச் சிறப்பித்துப் பேசிப் பழந்தமிழர் வாழ்வு நெறியை உணர்த்து வர். திருவள்ளுவப் பெருந்தகை,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

என்று. இல்வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளை நயம்பட நவின்றுள்ளார். பழியஞ்சிப் பகுத்துண்டு, நல்லாற்றின் வழி ஒழுகி, அறனிழுக்காது. அறிவறிந்த மக்கட்பேறு கொண்டு, அன்புடன் விருந்தோம்பி, வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்று குறித் துள்ளார்.

இல்லறவியலில் அன்பின் சிறப்பின வற்புறுத்திய வள்ளுவர், துறவறவியலில் அருளின் மாட்சியினைப் புகன்