பக்கம்:உருவும் திருவும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உருவும் திருவும்

மருந்து என்ற அதிகாரத்தில் வள்ளுவர் வழங்கியுள்ள கருத்துக்களை, இன்றைய மருத்துவ மேதைகள் படித்து வியக் கின்றனர். மருந்தே உண்ணுமல் வாழ்வைக் கடத்தி விடலாம் என்கிறார் பேரறிஞர் திருவள்ளுவர். எவ்வாறு?

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியது அற்றது போற்றி யுனின்

என்றபடி, முன் உண்டது. செரிக்கும் வண்ணம் தேர்ந்து பின்னுண்பான், உடம்பு நோயால் வருந்துதல் இல்லை என்றார். மாறுபாடில்லாத உண்டியை மறுத்துண்டால் உயிர்க்கு ஊறுபாடில்லை என்று கூறியுள்ளார். மேலும்,

நோய்காடி நோய்முதல் நாடி அதுதணிக்கு ம் வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்று, நோய்முதற்கண் இன்னதெனத் தேர்ந்து. பின்னர் அந் நோய் தோன்றியதற்கான ஏதுக்களை ஆராய்ந்து, அதன் பின் னர் அந் நோய் தீர்க்கும் பல வழிகளையும் எண்ணி, அவ்வுடம் பின் வகையறிந்து, அதற்கு வாய்ப்ப அந் நோய் களைய முற்பட வேண்டும் என்று மருத்துவ நுட்பமுடன் மொழிந்துள்ளார் மேலும், அவர் மருத்துவத்துறை நான்கு கூறுபாடுகளை உடையது என்கிறார். முதலாவது நோய் உற்றவர். இரண் டாவது நோயைத் தீர்க்கும் மருத்துவன். மூன்றாவது மருந்து, நான்காவது அம் மருந்தினைச் செலுத்துபவன் என மருந்தினே நாற்கூருக்கிக் காட்டுவர் வள்ளுவர். இதனைக் கீழ்க்கானும் குறளால் அறியலாம் :

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்காற் கூற்றே மருந்து.

காமத்துப்பால்தான் வள்ளுவர்தம் இலக்கியச் சிறப்பினுக்குச்

சான்று பகரவல்லது. சொல்நயம், பொருள் நயம், கருத்து வளம், பாநலம், அணிநலன் முதலிய இன்னேரன்ன நயங்கள்