பக்கம்:உருவும் திருவும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழங்கிய வான்ம ைற 43

பலவும் நிறைந்து மிளிர்வது. இக் காமத்துப்பால் களவியல் கற்பியல் என ஈரியல்களை உடையது. களவு கற்பு என்ற இவ்விரண்டும் பழந்தமிழர் கண்ட அகவாழ்க்கை நெறி யாகும்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி

-திருக்குறள் 1191.

என்ற குறளில் காமத்தின் சிறப்பு வெளிப்படுதல் காண்க.

திருவள்ளுவர் கூறும் காதற் சிறப்பு கவிஞனுடையதாகும். மேலும் காமத்துப்பாலில் அவர்தம் அழகான கற்பனை நயத் தினையும் கண்டு களிக்கலாம். சான்றாக,

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேங் கரப்பாக் கறிந்து

-திருக்குறள் : 1.127.

என்றும்,

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து

-திருக்குறள் : 1.128.

என்றும் அமைந்துள்ள குறட்பாக்கள் கொண்டு இவ்வுண்மை யினைத் தேர்ந்து தெளியலாம். ‘மலரினும் மெல்லிது காமம்; சிலரதன் செவ்வி தலைப்படுவார்’ என்ற குறளில், வள்ளுவர். காதலின் உயிர்ப்பொருளை உணர்வோர் ஒரு சிலரே என் பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். காதல் இன்பத்திற்கு உவமை யாக வள்ளுவர் கையாண்டிருக்கும் பொருள், சிறந்ததாயும் பொருத்தமுடைத்தாயும் காணப்படுகின்றது.

அறிதோறு மறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு,