பக்கம்:உருவும் திருவும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 உருவும் திருவும்

இவ்வாறு முப்பாலிலும் தப்பாத கருத்துக்களைத் திருவள்ளுவர் தந்துள்ளமை அவரை உலகப் பேரறிஞர்களில் ஒருவராக்கியுள்ளமை கண்கூடு. எனவேதான், திருக்குறள் உலகின் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கீர்த்தியினைப் பெற்றுள்ளது. இந் நூல் ஆங்கிலம், இலத்தின், ஜெர்மனி, பிரெஞ்சு, போலிசு, உருசியம், வடமொழி, இந்தி, குசராத்தி, வங்கம், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், பர்மியம், மலாய் முதலிய பல்வேறு மொழிகளில் பெருமையுடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் வியட்நாம், செக், சீனம், ஜப்பானிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட உள்ளது. இவையெல்லாம் வள்ளுவர் வழங்கிய வான்மறையின் சிறப்பினை உணர்த்துவனவாகும்.

இதுகாறும் கூறியவற்றால் திருவள்ளுவர் வழங்கிய திருக் குறளின் தனிச்சிறப்புத் தெள்ளிதிற் புலனாகும். தமிழில் இன்று காணக் கிடக்கும் தொன்னுரலாம் தொல்காப்பியத் தினை அடுத்துத் திருக்குறள் ஒரு சிறப்பிடம் பெறுகின்றது: மக்கட் சமுதாயத்தின் வாழ்க்கைத் துணை நூலாக விளங்கு கின்றது. மக்கள் அறவழி நின்று நன்முறையில் பொரு வீட்டி, சிறக்க இன்பம் துய்த்துப் பெருவாழ்வு வாழ வேண் டும் என்பதனை வற்புறுத்திக் கூறுகின்றது. சுருங்கக் கூறின், வள்ளுவர் வழங்கிய வான்மறை, உலகம் உய்யும் நெறியினை உணர்த்தவந்த உயர்மறை எனக் கூறல் பொருத்தமுடைத் தாகும்.