பக்கம்:உருவும் திருவும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்மையும் வன்மையும் 49

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்

என்ற குறள்களுக்கு விளக்கமாய்க் கண்ணகியின் இம் மறுமொழியும் வாழ்வும் அமைந்தன. கோவலன் மாதவியிட மிருந்து திரும்பிவந்து கண்ணகி படுத்திருக்கும் பள்ளி அறைக் குள் நுழைகிருன். அதுபோது அவளுடைய வாடிய மேனி கண்டு, வருத்தங் கொண்டு,

சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைத்த இலம்பாடு நானுத் தருமெனக்கு

என்று கூறினன். அதுபோதும் அவனை முனியாமல்,

நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச் சிலம்புள கொண்மெனச் சேயிழை

கூறினள். இதன்வழி ஒருவர் பொறை, இருவர் நட்பு என்ற நாலடியார் கூற்று விளக்க முறுகின்றது.

நாடு காண்காதை தொடங்கித்தான் கண்ணகியின் மென்மைத்தன்மை மேலும் விளக்கமுறுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தின் எல்லையைக் கடந்த அளவிலேயே, கண்ணகி வாடி விட்டாள். இதனை இளங்கோவடிகள்,

பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண் இறுங்கொடி நுகப்போ டினைந்தடி வருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல வுயிர்த்து முதிராக் கிளவியின் முள்ளெயி றிலங்க மதுரை மூதூர் யாதென வினவ

-சிலப் : நாடுகாண் காதை : 37-41.

என்று குறிப்பிட்டுள்ளார். சிறிது தொலைவு நடந்த அளவி

லேயே கால்கள் வருந்தி நின்றன; வியர்வை கொட்டியது:

நெடுமூச்செறிந்தாள்: முதிராத மழலைச் சொல்லை யுதிர்த்துக்

கோவலனை நோக்கி, மதுரை மூதூர் இன்னும் எத்தனை காவ

உ. தி.-4