பக்கம்:உருவும் திருவும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உருவும் திருவும்

தம் உளது?’ எனக் கேட்டாள். கோவலனும், ஆறைங்காதம்’ என்று ஆறுதல் உரை பகர்ந்து அவள் மென்மையினையும் அறியாமையினையும் கண்டு நெக்குருகி நைந்தான்.

தவத்துறையாட்டியாம் கவுந்தியடிகளின் துணை மதுரை யின் நெடுவழிப் பயணத்தின் இடையே கோவலன் கண்ண கிக்குக் கிடைக்கின்றது. மூவரும் வழிநடந்து செல்லுங்காலை யில் பூம்பொழிவிலிருந்து வம்பப் பரத்தை ஒருத்தியும் வறு மொழியாளன் ஒருவனும் எதிர்ப்படுகின்றனர். அவர்கள், ‘காமனும் அவன் தேவி இரதியும் போன்ற இவர்கள் யாவர்?” என்று கவுந்தியடிகளை நோக்கி வினவினர். கவுந்தியடிகளும் அவர்களுக்கு மறுமொழியாக, “எம் மக்கள்: வழித்துன்பம் பெரிதும் உற்றவர்கள் என்று நவின்றனர். இதனைக் கேட்ட அவ்விருவரும், மேலும், “ஓர்வயிற்றில் பிறந்தவர்கள் கணவன் மனைவியாக வாழ்தல் உண்டோ, கற்று வல்ல துறவியாரே? என்றனர்:

உடன்வயிற் றேர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முன்டோ கற்றறிக் தீரென.

-சிலப்: காடுகாண் காதை : 227-28

இத் திமொழி கேட்ட கண்ணகி பெரிதும் வருந்தித் தன் செவிகளைப் புதைத்துக் கொண்டு காதலனின் பின்னல் நடுங்கி நின்றாள்.

தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க.

-சிலப்: நாடுகாண் காதை : 229-30.

இந்நிகழ்ச்சியிற்ை கண்ணகியின் மென்மைத்தன்மை மேலும் விளக்கப் பெறுகின்றது.

கண்ணகி காட்டின் இடையே நீர்நசை வேட்கையுற்றாள். அவ்வேட்கையைத் தணிக்க நீர் கொணரச் சென்றான்