பக்கம்:உருவும் திருவும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்மையும் வன்மையும் 51

கோவலன். அப்போது வனசாரிணி என்னும் வன்காட் டிடையே இயங்கும் மயக்கும் கானுறை தெய்வம் காதலிற் சென்று, நயந்த காதலின் நல்குவன் இவன்’ என்று வயந்த மாலை வடிவில் தோன்றியது. ஆனல் மயக்குந் தெய்வம் வன்காட்டில் உள்ளதென மாடல மறையோன்வாய் முன்னமே யறிந்த கோவலன், வஞ்சம் பெயர்க்கும் பாய்கலைப் பாவை யாம் கொற்றவையின் மந்திரத்தைச் சொல்ல, வனசாரிணி அவனே வணங்கி,

புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உறையா தேகு

என்று கேட்டுக்கொண்டதினின்றும், தவத்துறையாட்டியின் சீற்றத்தினும், இல்லறத் துறையில் தலைநின்ற கற்பின்செல்வி கண்ணகியின் பொறுமைப் பண்பே தன்னைத் தப்பாது ஒறுக் கும் என வனசாரிணி எண்ணியமை தெள்ளிதிற் புலனுகும்.

பாலை நிலத்தில் வாழும் வேட்டுவர்கள் தெய்வத்திற்கு வழிபாடு எடுக்கின்றனர். ஐயை கோட்டத்தில் தங்கி இளைப் பாறிய கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும், வேட் டுவக் குடியில் தோன்றித் தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி என்பாள், தெய்வமேறப் பெற்றுக் கண்ணகியை நோக்கிப் பின்வருமாறு கூறுவதனைக் கேட்கின்றனர்:

இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனே டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்ப.

-சிலப்: வேட்டுவ வரி: 45-50.

இப் புகழ்ச்சிமொழியினைக் கேட்ட கண்ணகி. இம் மூதறி வுடையாள் மயக்கத்தாற் கூறினள் என்று. தன் பெறுதற்கரிய