பக்கம்:உருவும் திருவும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 உருவும் திருவும்

கணவனது பெரிய புறத்தே மறைந்து புதிய புன்முறுவலைக் கொண்டாள் என்கிறார்:

பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று

அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி

விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப.

-சிலப் : வேட்டுவ வரி: 51-33.

மதுரைமா நகரினை நெருங்கின்றபோது வையையாறு குறுக்கிடுகின்றது. வையை யென்ற பொய்யாக் குலக்கொடி கண்ணகிக்கு நிகழப்போகும் துன்பத்தினை முன்கூட்டியே அறிந்தனள் போலப் புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக் கண்ணில் நீர் நிறையக் கொண்டாள்” என்று இளங்கோவடி கன் கூறுகின்றபோது, கண்ணகியின் மென்மைக்கு இரங்க வைக்கின்றார்.

மதுரைமா நகரின் புறத்தே தங்கியிருந்தபோது, கோவ லன் கவுந்தியடிகளைக் கைதொழுது, தான், நறுமலர் மேனி நங்கையாம் கண்ணகிக்கு நடுங்கு துயர் தந்ததைக் கூறி வருந்துகின்றான்.

அடுத்து, கவுந்தியடிகள் கண்ணகியைத் தீமையேயிலாத இடைக்குல வாழ்வு நடாத்தும் மாதரியிடம் அடைக்கலப் படுத்தியபொழுது கூறும் மொழிகள் கண்ணகியின் மென் மைத் தன்மையினையும் கற்புக் கடப்பாட்டினையும் உரைப் பனவாம்:

என்னெடு போந்த இளங்கொடி கங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குதுய ரெய்தி காப்புலர வாடித் தன்துயர் காணுத் தகைசால் பூங்கொடி