பக்கம்:உருவும் திருவும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்மையும் வன்மையும் 53

இன்துணை மகளிர்க் கின்றி யமையாக்

கற்புக் கடம் பூண்டஇத் தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்.

-சிலப் : அடைக்கலக் காதை . 137-144.

கண்ணகி வெம்மையான பாலைவழியில் நடக்க ஆற்றாமல் துன்பப்பட்டு நடந்தாள்; தன் துன்பத்தினைப் பொருட்படுத் தாமல் தன் கணவன் படும் துன்பமே பெரிதெனக் கொண்டு அதற்காக வாடி வதங்கினுள்.

“தம் கணவர்க்கு இனிய துணையாகப் பொருந்திய பெண் களுக்கு இன்றியமையாத கற்புக் கடனை மேற்கொண்ட இத் தெய்வமல்லாது பொலிவினையுடைய வேறு தெய்வத்தினை யான் காணவில்லை என்று, அறத்துறையில் மேம்பட்ட கவுந்தி யடிகளே கூறுவாரேயாளுல், கண்ணகியின் மென்மையினையும் கற்பு மேம்பாட்டினையும் பிறரொருவரால் உரைக்கவும் ஒல்லுமோ? குணவாயிற்கோட்டத்து அரசு துறந்து இருந்த” இளங்கோவடிகள். துறவறநெறி நின்ற ஒரு துரயதுறவியின் வாயாலேயே இல்லற வழிநின்ற ஒர் எளிய பெண்ணின் பெருமையினைச் சிறப்புறப் பேச வைத்துள்ளமை, இவண் ஊன்றி உணரத்தக்கதாம்.

கண்ணகி, கணவன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுமுன் அடைக்கலம் புகுந்த மாதரியின் வீட்டில் விரைந்து அட்டிற்றாெழிலை மேற்கொள்கின்றாள். அங்கும் அடிகள் கண்ணகியின் மென்மையினைச் சுட்டுகின்றார். தன் மெல்லிய விரல்கள் சிவப்பப் பல்வேறு பசுங்காய்களை அரிவாள்மணையால் வெட்டி யெடுத்துக்கொண்டு, தன் திருமுகத்தில் வியர்வை தோன்ற, சிவந்த கண்கள் மேலும் சிவக்கச் சமையல் செய்து முடித்துக் கணவனுக்குப் பரிமாறுகிருள்:

மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்