பக்கம்:உருவும் திருவும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 உருவும் திருவும்

திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன கரிபுற அட்டில் கண்டனள்.

-சிலப்: கொலைக்களக் காதை : 29-32.

அதுபோது கண்ணகியைக் காணும் ஐயையும், மாதரியும் மகிழ்ந்து கோவலனை மணிவண்ணனுகவும், கண்ணகியைத் தங்கள் குலத்துப் நப்பின்னையாகவும் கொள்கின்றனர்.

கோவலன் கண்ணகியின் காற்சிலம்பை விற்றுவர மதுரை செல்லுமுன் கண்ணகியிடம் தான் அவளுக்குச் செய்த சிறுமையினை எல்லாம் எடுத்து மொழியும்போது, எழுகென எழுந்தாய்; என் செய்தனே?’ என வியந்து கூறுகிருன். அது போது கண்ணகி,

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா வுள்ள வாழ்க்கையே தைலின் ஏற்றெழுந் தனன்யான்

என்று தன் இல்லறக் கடமைகள் அவனில்வழி நிறைவேருமற் போனதனைக் குறிப்பிட்டு, அவன்தன் போற்றா வொழுக் கத்தினைச் சுட்டிக் காட்டி, அதே நேரத்தில் தன்நெறி பிறழாத -கலங்கல் இல்லாத-கற்புநெறி வாழ்வினையும் எடுத்து மொழிகின்றாள். இதனைக் கேட்ட கோவலன் அவளைப் பின் வருமாறு பாராட்டுகின்றான்:

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் கல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துனே யாக என்னெடு போந்திங் கென்றுயர் களைந்த