பக்கம்:உருவும் திருவும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்மையும் வன்மையும் 55

பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணரில் விளக்கே

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி.

-சிலப்: கொலைக்களக்காதை : 84-91.

நெஞ்சுத்தளை யவிழ்ந்த கோவலனின் இந்த மனந்திறந்த பாராட்டுரையினல் நாணமும், மடமும், கற்பும், கணவன் துயர்களையும் கடப்பாடும் நிறைந்த நாணின் பாவை, நீள்நில விளக்கு, கற்பின் கொழுந்து, பொற்பின் செல்வி கண்ணகி என்பது குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிவிடுகின்றது. தன்னை மாலையிட்ட மணவாளனிடமிருந்து இத்தகு பாராட்டினைப் பெற்ற கண்ணகியைக் கற்புக்கடம் பூண்ட தெய்வம் என்பதில் பிழையுமுண்டோ?

இதுவரையில் கண்ணகியின் மென்மைத் தன்மையினையும் அமைதிப் போக்கினையும் மட்டுமே கண்டு வந்தோம். இனி அவள் சீற்றம்கொண்டு சினந்துநின்ற நிலையினைக் காண்போம். கோவலன் பாண்டிய மன்னன் ஆணைவழிக் கொலையுண்டான் என்பதனைக் கேள்வியுற்றாள் கண்ணகி. சீறி எழுந்தாள்: நிலவினைப் பொழியும் திங்கள் கரிய முகிலோடும் நீள்நிலத்தின் கண் வீழ்ந்தது எனக் கீழே விழுந்தாள்; தன் செவ்வரி படர்ந்த சிவந்த கண்கள் மேலும் சிவக்க அழுதாள். தன் கணவன் எங்குச் சென்றானே என்று கூவி வருந்தி ஏக்கமுற்று மயங் கிளுள்:

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேண்கிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்களுஅ என்னு இனக்தேங்கி மாழ்குவாள்.

-சிலப்: துன்பமாலை: 30-33.

“மன்பதை அலர்துாற்ற மன்னவன் தவறிழைப்ப அன்டனே இழந்தேன் யான் என்று அவலநெஞ்சோடு அரற்றிள்ை. தவறு செய்தவன் மன்னன். அது அவளுக்கு நன்கு தெரியும்,