பக்கம்:உருவும் திருவும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்மையும் வன்மையும் 59

செங்குட்டுவன் தலைநகராம் வஞ்சியில் கடவுள் மங்கலம் செய்த காலையில் கண்ணகி தெய்வ வடிவில் தோன்றி,

தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில் கல்விருந் தாயின்ை நானவன் றன்மகள் வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் என்னேடுங் தோழி.மீ ரெல்லீரும் வம்மெல்லாம்

-சிலப்: வாழ்த்துக் கதை : 10.

என்று கூறினுள். தன் கணவனைக் கொன்ற பாண்டிய

மன்னனையே தன் தந்தையாகக் கூறினுள் என்றால், அவள்,

தெய்வநிலைக்கு உயர்ந்துவிட்டாள் என்பதன்றாே பொருள்! மேலும்,

அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண்பிறங் தோர்க்குப் பொறையே பெருமை

என்று பெருங்கதை கூறுகின்றபடி, கணவன் தவற்றாெழுக்கத்தில் தலைப்பட்டபொழுது அவனைச் சினந்து பே ச வி ல் லை. அம்மட்டோடன்றித் தன் வாழ்வைப் பறித்துக் கொண்ட மாதவியினையும் வெகுளவில்லை என்பதனை, வாழ்த்துக் காதை யின் வழியே, காவற்பெண்டு சொல்கொண்டு தெளியலாம். “மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள்” என்ற தொடர் இதனை உணர்த்தும். அடித்தோழியும், கற்புக் கடம் பூண்டு காதலன் பின்போந்த பொற்றாெடி நங்கை’ என்று கண்ணகியைச் சிறபித்துப் பேசுகின்றாள்.

இவ்வாறு புகார்நகரில் ஈராருண்டு அகவையினளாய் அறிமுகப்படுத்தப்பட்ட கண்ணகி, பெண்மையின் மென்மை பெற்றுத் திகழ்ந்து, தன் கணவன் இசைகேடாகக் கொலை யுண்ட வழிச் சீறிச் சினந்து மன்னனையும் மதுரையையும் அழித்து, பின் சீற்றம் தணிந்து தன்னேயே நொந்துகொண்டு அமைதி பெற்றுக் கணவனுடன் விமானமேறி விண்ணுல கடைகின்றாள்.