பக்கம்:உருவும் திருவும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உருவும் திருவும்

அவர்கள் எஞ்ஞான்றும் வீரம் வீறும் வினைகள் விளைவிப்போ ராய் விளங்கினர்.

மறக்குடி மங்கையர் விளங்கிய நாடே உலகின் முன்னணி யில் முன்னேற்ற முரசு முழக்குகின்றது. இதனை முன்னர் நிகழ்ந்த பெரும்போரே எடுத்துக்காட்டும். ஜப்பான் நாடு நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைந்த ஒரு நாடு. ஆல்ை நம்மால், சுண்டைக்காய் நாடு’ என்று ஏளனமாக எள்ளி நகையாடப்பட்ட அந்த நாடுதான். அவனி வியக்கும் வகையிலே வெற்றி முரசு கொட்டிற்று.

உருசிய நாடு பல துறைகளிலும் மேம்பட்ட நாடு. அத னேயே அமரில் அடக்கிற்று சுண்டைக்காய் ஜப்பான். இந்த வெற்றிக்கு மிகமிக முக்கியமான காரணம் ஜப்பானியமக்கள் தங்கள் குழவிப் பருவமுதலே தங்கள் தாய்மாரிடமிருந்து பெற்றுவந்த வீரப் பயிற்சியேயாகும். தாயின் முகம் மலர மைந்தன் மழலைமொழி பேசும்போதே, தாய் தன்னுடைய பழி பிறங்காப் பண்புடைப் பாலனுக்குப் பயிற்றுவிப்பன நாட்டுப்பற்றும், தியாக உள்ளமும், வீர வாழ்க்கையுந்தான். அவர்களுக்கு விளையாட்டுக் காட்டப்படும் விளையாட்டுக் கருவிகள் அமரிலே பயன்படுத்தப்படும் படைக்கலங்களின் போலிகளாகும். அவர்களுக்குப் பள்ளியிலே பாடங்களோடு போர்ப்பயிற்சியும் பயிற்றுவிக்கப்பட்டது. நாட்டின் நலனே நம்முடைய நலம்’ என்ற தியாகசிந்தையும், நாட்டின்மீது பகைவர் போர்தொடுக்கும் பொழுது வீட்டினுள் கரந்துறை யாமல், அடுபோர் செய்து, பிறந்த பொன்ட்ைடின் மானம் காக்கும் தீரச்செயலும் அவர்களிடையே மண்டிக்கிடந்தன. ஜப்பான் நாட்டுத் தாயமார்கள் தாம் பெற்றுப் பேணி வளர்த்த மக்களை ஒன்றுகூட்டி வீரவுரை கூறிப் பகைமுரசு கொட்டிப் போர்முகம் நண்ணிய பகைவரோடு போரிடவும், அமரிலே அஞ்சுதல் சிறிதுமின்றி அடுபோர் செய்யவும், நாட் டிற்கு நலம் சேர்க்கத் தங்கள் உயிரையே நல்கவும் பணித்தனர். முடங்கல் வரைந்து அவர்களுக்கு ஆர்வமூட்டுதல் போன்ற