பக்கம்:உருவும் திருவும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மறக்குடி மங்கையர்

தமிழகம் வீரத்தின் விளைநிலம். இங்கு வாழையடிவாழை யாக வீர மன்னர்களே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தமிழக வரலாற்றிலே கொள்கையிலே கோழையாகிக் கோலோச்சிய வர்கள் குறைவு. அவர்கள் தம் உருவிலே வீரம், மூச்சிலே வீரம், பேச்சிலே வீரம், செயலிலே வீரம், சிந்தையிலே வீரம் நிரம்பி வழிந்தது. வீரம் அவர்களோடு விளையாடியது. இம யத்தில் இமயவரம்பனின் இலாஞ்சனை பறந்தது. மின்னுலாவிய வெள்ளிப் பனிவரையில் தமிழரது வெற்றிச் சின்னம் பொறிக்கப் பட்டது.

அவர்களுடைய வாழ்க்கையே வீரவாழ்க்கை எனலாம். ஆம் அவர்கள் காதலையும் வீரத்தையும் தங்களின் இரு கண்களாகப் பேணி வளர்த்தனர்.

இத்துணைச் சிறப்புடையதாகத் தமிழகம் வீரத்தில் மேம் பட்டு விளங்கா நின்றதற்கு நம் நாட்டு மறக்குடி மங்கையரே பொறுப்பாவர். வீரம் வழிவழி வந்ததே மறக்குலப் பெண்டி ரால் என்றால் அது மிகையாகாது. நம் மறக்குடிப் பெண்டிர் தாம் அருமையோடு பெற்ற'குழந்தைகளுக்குப் பால் புகட்டிய தோடன்றி, வீரத்தையும் ஊட்டினர்கள். வீரம் விளைவித்த பல வீரர்களின் கதைகளின் மாண்பினை எடுத்துரைத்தனர். இளமையிற் கல்வி சிலையிலெழுத்தல்லவா! எனவே அவர்கள் இளமை தொட்டே வீரம்மிக்க வினைகள் ஆற்றுவோராய் விளங்கினர். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற தமிழ்நாட்டுப் பழமொழிக்கியைய இளமையில் அவர்களோடு விளையாடிய வீரம், முதுமையிலும் நிலைத்து நின்றது. எனவே