பக்கம்:உருவும் திருவும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 உருவும் திருவும்

அருச்சுனன் போலவென ஆக்கிவிடுவாள்; யாண்டுமெக் காலத்திலும்-அவள்

இன்னருள் பாடுகற் ருெழில் புரிவேன்

என்கிறார். இதில், பத்துமாதம் சுமந்து படாத பாடு பட்டுப் பெற்றெடுப்பதோடு மட்டும் தாயின் கடமை தீர்ந்துவிடுவ தில்லை; அவனை அருச்சுனனைப்போல விறல் மறவனுக ஆக்கும் செயலும் அவளிடம்தான் உள்ளது என்பது விளக்க முறுகின்றது. பண்டைத் தமிழர் அருச்சுனனை வில்லாற்றலில் வல்ல வீரஞகக் கருதினர். எனவே, அதனையே பாரதியார் இங்குக் குறிக்கிறார். மேலும் அவர், இதனை வலியுறுத்தி,

நீண்டதோர் புகழ் வாழ்வும்-பிற

நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள் என்கிரு.ர்.

புகழ் வாழ்வு வீரத்திலுைம் விளைவதொன்றாகும். எனவே, பாரதியார் தாய்க்குலத்தைப் பற்றிப் பலபடப் பேசுகிரு.ர்.

மேலும் பலவாற்றானும் புகழோடு வாழ்ந்த தமிழ் வீரர் வணங்கிய தெய்வம் கொற்றவை ஆகும். வெற்றி தரும் தாயே கொற்றவை என்று பெயர் பெற்றாள்.

மேற் கூறியனவற்றிலிருந்து, பெண்ணிடமிருந்தே வீரம் பிறக்கிறது என்பதைத் தெள்ளிதின் உணரலாம். இத்தகைய சிறப்பியல்புகள் எய்தப்பெற்ற வீரத்தாயர் களை “வீர வாழ்க்கையின் வழிகாட்டிகள்’ என்றாலும் பொருந்தும். இம் மறக்குல மங்கையர் இன்றும் நல்வீரம் விளைவிக்கும் வீரக்காளைகளை ஈந்து, நாட்டிற்கு நலம் பல நல்கி வருகின்றனர்.