பக்கம்:உருவும் திருவும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விதியின் விளையாட்டு

ஆண்டாண்டு காலமாக அவனி மாந்தரை ஆட்டிப் படைத்து வருவது விதி. விதிக்கும், மனிதனின் மதிக்குமாக நடைபெற்றுவரும் போராட்டம் ஒர் அலை ஒயாப் போராட்ட மாகும். இந்தத் தொடர்ந்த போராட்டமே மனித வாழ்வை அலைக்கழித்து வருகின்றது. விதியே வலிது என்பாரும், விதியை மதியால் வெல்லலாம் என்பாரும் உளர். ஆயினும், யாவரும் விதி செய்யும் சதியினுக்கு இவக்காகி நிற்பர் என்பது ஒருதலை.

விதி பற்றிய கொள்கை இன்று நேற்றுத் தோன்றிய தன்று. சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங் களிலும் பலவிடங்களில் விதியின் வலிமை பேசப்படுகின்றது. மேலை நாட்டினரும் விதிசெய்யும் விளைவுகளை உடன்பட்டுள்ள னர் என்பதை மில்டனின் “துறக்க இழப்பு’ (Paradise Lost) என்னும் நூல்கொண்டும், சிந்தனைச் செல்வர் எமர்சனின் (Emerson) கட்டுரை கொண்டும் நன்கு தெளியலாம். வாழ் வினையும் தாழ்வினையும் வகுப்பது விதி தான் என்று பொது வாக இங்குப் பேசப்படுகின்றது. துன்பம் தோன்றும் பொழு தெல்லாம் விதிமேல் பழிபோடுபவர் பலர் நம் சமுதாயத்தில் உளர். எனவே விதியின் ஆற்றலின் அளவைக் காண்பது நலம் பயப்பதாகும்.

தொன்னுாலாம் தொல்காப்பியம் தந்த ஒல்காப் பெரு மைத் தொல்காப்பினர் முதலாகப் பாரதிக்குப் பின்னர் இந்தத் தலைமுறையில் வாழும் கவிஞர்கள் ஈருகப் பலரும் விதி குறித்த தம் கருத்துக்களைக் கூறியுள்ளனர். தொல்காப்