பக்கம்:உருவும் திருவும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 உருவும் திருவும்

பியர்ை சொல்வதிகாரத்தின் கிளவியாக்கத்தில், அஃறிணை முடிவு கொள்ளும் உயர்தினைச் சொற்களை விளக்கப் பின் வரும் நூற்பா செய்துள்ளார். அது வருமாறு:

காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வருடம் ஆயி ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம் பால்பிரித் திசைபா உயர்திணை மேன.

-தொல். கிளயாவிக்கம் : 58.

இதற்கு உரை எழுதப் புகுந்த வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேணுவரையர், ‘பால் வரை தெய்வம் என்பது எல்லார்க்கும் இன்ப துன்பத்திற்கு காரணமாகிய இருவினை யையும் வகுப்பது. வினை என்பது அறத் தெய்வம்’ என்று உரை கூறிள்ளார். எனவே தொல்காப்பியனுர் வினையினை உடன்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.

தெய்வம், பால், முறை, நியதி, ஊழ் வினை, ஊழ்வினை முதலிய சொற்கள் ஒரு பொருளினையே குறிக்கும் ஒரு பொருட் சொற்களாகும். தமிழ்நாடு செய்தவப் பயனப்த் தோன்றிய திருவள்ளுவர், ஊழ்’ என்ற ஒரு தனி அதி காரம் வகுத்து ஊழின் ஆற்றலினைப் பற்றிப் பலபடப் பேசி யுள்ளார். ஊழ் என்பதன விளக்கவந்த பரிமேலழகர், “ஊழ்-அஃதாவது, இருவினேப் பயன் செய்தவனையே சென்றடைதற் கேதுவாகிய நியதி. ஊழ், பால், முறை. உண்மை, தெய்வம், நியதி, விதி யென்பன ஒரு பொருட் கிளவி என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் ஊழின் பேராற்றலை,

ஊழிற் பெருவலி யாவுள’ மற்றாென்று சூழினுந் தான்முந் துலும் -திருக்குறள் 380