பக்கம்:உருவும் திருவும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் விளையாட்டு 73

உண்டாக்கினய்: ஆதலின் ஊழ்வினையே நீ நிச்சயமாக நன்மையை யுடையாய்’ என்று இடைவழியில் தலைவன் தலேவியரைக் கண்டோர் தம்முள் கூறிக்கொண்டனர். அவ் வழகிய பாடல் வருமாறு:

இவனிவள் ஐம்பால் பற்றவும் இவளிவன் புன்றலை யோரி வாங்குகன் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு வுறுப மன்னே நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே. -குறுந்: 329.

அடுத்து, இத்தகைய ஊழ்வினை பற்றிய நம்பிக்கை பழந் தமிழர்க்கு மிகுதியாக இருந்தது என்பதனைக் காப்பியங்கள் வழியும் நாம் தெரிந்துகொள்ளலாம். சேரன் தம்பி இசைத்த சிலப்பதிகாரத்தின் பதிகம் நூல் எழுந்ததற்கு மூன்று காரணங் களைக் குறிப்பிடுகின்றது.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் ருவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுTஉம்

என்னும் பகுதிகொண்டு, ஊழ்வினை பிறவிதோறும் தொடர்ந்து

தக்க பயன் பயக்கும் என்பது போதருகின்றது.

கானல் வரியில் தொடங்குகின்றது ஊழ். காவிரி பூம்பட்டி னத்தின் கடற்கரைச் சோலையில் கோவலனும் மாதவியும் புது மணமக்கள் போல் கொலு வீற்றிருக்கின்றனர். இன்பம் நிறைந்த இனிய சூழலில், அவ்வேளையில் மாதவி மனம் மகிழக் கோவலன், மாதவியின் கையிலிருந்த யாழினை வாங்கி வாசித் தான். ஆனல் அப்பாட்டு விதியின் சதியால் மாதவி, கோவ