பக்கம்:உருவும் திருவும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 உருவும் திருவும்

பயன் எய்துவார் என்பதும், ஊழையும் வெல்வர் என்பதும், தெய்வத்தால் இடுக்கண் வரினும் முயற்சியினைக் கைவிடுத லாகாது என்பதும் நன்கு விளங்கும். எனவே, ஊழின் ஆற்றல்

வலியதாக இருந்தாலும், சோம்பலின்றி முயன்று வெற்றி

காணலாம் என்பதே திருவள்ளுவரின் தெளிந்த கருத்தென்பது

தெரியவருகின்றது.

கணியன் பூங்குன்றனர் என்னும் புறநானூற்றுப் புலவர், ‘மின்னலுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான் அமையாது, கல்லே அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியேயாம் மிதவை (தெப்பம்) போல, அரியவுயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மை கூறுபாடறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வானம் தண்துளி தலைஇ ஆனது

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம். -புறநானுாறு : 192.

ஊழ்வினையின் திருவிளையாடல் குறுந்தொகைப் பாட் டொன்றில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. தலைவனும் தலைவி யும், பாலை நிலத்தில் உடன்போக்கு நிகழ்த்தியபொழுது அவர்களை இளவயதிற் கண்டோர், பின் வருமாறு கூறிக் கொள்கின்றனர். “இவன் (தலைவன்) இவளது (தலைவியது) கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவனது புல்லிய தலை மயிரை வளைத்து இழுப்பவளாய் ஒடவும், அன்புடைய செவிலித் தாயார் இடைமறித்துத் தடுக்கவும் ஒழியாமல் அயற்றன்மையுடைய சிறிய சண்டையை முன்பு செய்வார் கள். இப்பொழுதோ மலரைப் பிணைத்த இரட்டை மாலை யைப் போன்ற இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை