பக்கம்:உருவும் திருவும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் விள வாட் டு 75

வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரான் ஆகி

என்கிரு.ர். ‘விதி வந்துறும்போது மதி முன்னே கெடும்’ என் பதனை இது விளக்கி நிற்கின்றது.

மேலும், அருகசமயத் துறவியாம் கவுந்தியடிகள் இராம லும், நளனும் காடுசென்றது ஊழ்வினை வயத்தால்தான் என்று கூறிக் கோவலனைத் தெருட்டுகின்றார் :

அடவிக் கானகத்து ஆயிழை தன்னை இடையிருள் யாமத்து இட்டு நீங்கியது வல்வினே யன்றாே மடந்தைதன் பிழையெனச் சொல்லும் உண்டேற் சொல்லா யோ.ே

கோவலன் பண்டை யூழ்வினை யுறுத்து இறந்தான் என்றும், பண்டை விளைவாகி வந்த வினை வளையாத செங் கோலை வளைத்தது’ என்றும் சிலப்பதிகாரம் கூரு நிற்கும்.

இதனையே கவிச் சக்கரவர்த்தி கம்பர் தம் அழியாப் பெரும் காப்பியமாம் இராமாயணத்தில் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். சிலவற்றைக் காண்போம்:

இராமன் முடி சூடவேண்டிய நாளிலே மரவுரி தரித்து நிற்கின்றான். இதனைக் கம்பர் பின்வருமாறு கூறுகிரு.ர்.

வாழ்வினை நுதலிய மங்க லத்துங்ாட் டாழ்வினை யிதுவரச் சீரை சாத்திளுன் சூழ்வினை நான்முகத் தொருவற் சூழினும் ஊழ்வினை யொருவரால் ஒழிக்கற் பாலதோ.

மனிதனைப் படைத்த நான்முகளும் பிரம்மனே வந்தாலும் விதியை மாற்றியமைக்க முடியாது என்கிறார் கம்பர். |

கோசலை, இராமன் முடி புனைந்து வருவான் என ஆவலோடு எதிர்நோக்கியுள்ளாள். ஆனால், அவள் முன் இராமன் விதியின் சதியால் பின்வருமாறு செல்கிருன்;