பக்கம்:உருவும் திருவும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 உருவும் திருவும்

குழைக் கின்ற கவரி யின்றிக்

கொற்றவெண் குடையும் இன்றி இழைக்கின்ற விதிமுன் செல்லத்

தருமம்பின் இரங்கி யேக மழைக்குன்றம் அனையான் மெளலி

கவித்தனன் வரும்என் றென்று தழைக்கின்ற உள்ளத்து அன்ள்ை

முன்ைெரு தமியன் சென்றான்.

இதனைப் படிக்கின்றபொழுது நம் கண்களில் நீர் சுரக்கின் மது அல்லவா? மாதர் இருமருங்கும் வெண் சாமரை விச, வெண்கொற்றக் குடையினை ஏவலர் பிடித்துவர, முடி புனைந்து செல்லவேண்டிய இராமன் விதியால் தனியே சென்றான் அல்லவா?

மேலும், இராமன் கைகேயி ஏவலால் காடு செல்லத் துணிந்தான் என்பதைக் கேள்விப்படுகிருன் இலக்குவன். பொங்கிற்று சீற்றம். காலதேவன்போல் கனன்றான். வில்லை எடுத்தான். அம்பு தெறித்தான். அதுகேட்ட இராமன் தம்பி யிடம் வந்தான். விளையாத சினம் விளைந்தது எப்படி? என்று கேட்டான்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை யற்றே பதியின் பிழையன்று பயந்து கமைப்பு ரந்தாள் மதியின் பிழையன்று மகன்பிழை யன்று மைந்த விதியின் பிழைநீ யிதற்கென்னை வெகுண்ட தென்றான்.

‘நதியில் நீரில்லாமல் இருப்பது நதியின் குற்றமன்று. அது போன்றே நான் காடேக நேர்ந்ததற்குக் காரணம் தசரதனும் அல்லன்: நம்மைப் பேணி வளர்த்த கைகேயியும் அல்லள்: பரதனும் அல்லன்; ஆனல் விதியின் பிழையப்பா இது’ என்று கூறி, விதியின் பேராற்றலை உணர்த்தித் தம்பியை அமைதிப் படுத்தின்ை இராமன்,