பக்கம்:உருவும் திருவும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 உருவும் திருவும்

கீழ் மேலாகும்; கிழக்கு மேற்காகும், அந்தணர் புலேயர்தமைப் போற்றிடுவர்’ என்கிறார் பாரதியார்.

இதுகாறும் கூறியவற்றால் விதியின் வலிமை பெரிது என்பதும், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதும், விதியின் விளையாட்டுக்கு வியனுலக மாந்தர்கைப் பொம்மை யாக இருப்பர் என்பதும் புலகுைம்.

ஆயினும் எதற்கும் எச் செயலுக்கும் விதிமேற் பழியைப் போட்டு வாளாச் சோம்பிக் கிடக்காமல் ஊக்கத்தோடு உழைத்தால் தடைக்கற்கள் எல்லாம் தகர்ந்து வெற்றிக் கதவு திறக்கும் என்பதும் நாம் உணர வேண்டியதொன்றாகும். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்று நம் ஆன்றாேர் ஆக்கமும் ஊக்கமும் ஊட்டும் உரை கூறியதும் இதன் பொருட்டேயாகும்.