பக்கம்:உருவும் திருவும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் விளையாட்டு 79

திருதராட்டிரனும் இறுதியில் சம்மதித்துவிட்டான். இதனைப் பின்வருமாறு கூறுகிறார் பாரதியார் : --

விதிசெயும் விளைவினுக்கே-இங்கு

வேறு செய்வார் புவிமீ துளரோ?

திருதராட்டிரனை மறுத்துப் பேசுகிருன் விதுரன். அதற்குத் திருதராட்டிரன், o

விதி விதி விதி! மகனே!-இனி

வேறேது சொல்லுவன் அட மகனே!

என்கிருன்.

விதியின் ஆற்றலைப் பிறிதோரிடத்திலும் பாரதியார் வற்புறுத்திக் கூறியுள்ளார். பாண்டவர் பெரிய தந்தையார் அழைப்பின் பேரில் அத்தினபுரிக்குப் பயணமாகிரு.ர்கள். அது பொழுது விதி பற்றிய ஒர் அருமையான கருத்தினைப் பாரதியார் தருகின்றார்.

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்

நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;

வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்; கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்;

கீழ்மேலாம். மேல்கீழாம்: கிழக்கு மேற்காம்; புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்

போற்றிடுவார் விதிவகுத்த போழ்தி னன்றே.

‘விதியால் காட்டு அரசன் சிங்கம், நரி வகுத்த குழியில் விழும்; யானை சிற்றெறும்பால் சாகும்; வன்மைமிக்க புலியைப் புழு கொல்லும்; வருங்காலத்தை முற்றும் உணர்ந்த முனியுங்க வரும் மயங்கி நிற்பர் ஒடையில் மலை மிதக்கும்; மேல் கீழாகும்: