பக்கம்:உருவும் திருவும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 உருவும் திருவும்

“எம்பெருமானின் இணையடி நீழல் குற்றமற்ற வீணையின் இசையாகவும் (செவிக்கின்பம்), இளவேனிற் காலத்து இன்ப மாலையில் தோன்றும் முழுமதியாகவும் (காட்சிக்கின்பம்), கோடையில் மெல்லென வீசும் தென்றலாகவும் (மெய்க் கின்பம்), இளவேனிற் காலத்துக்கிடைக்கும் துய்க்கப்படு பொருள்களாம் மா, பலா, வாழை போன்ற கனிகளாகவும் (வாய்க்கின்பம்), வண்டுகள் மொய்க்கும் மலர்ப் பொய்கை யாகவும் (மூக்கிற்கின்பம்) தோற்றமளிக்கின்றது’ என்று தமிழாளியாம் திருநாவுக்கரசர் பாடுகின்றார். ஐம்புல இன்ப நுகர்வினைக் குற்றமறத் தருவது இறைவனின் இணையடி நீழலே என்பதைத் தம் தேவாரத் திருப்பாட்டால் திருநாவுக்கரசர் உணர்த்தியுள்ளார். இதனைச் சேக்கிழார் நன்கு மனத்துட்கொண்டு அக் கருத்தினையே கீழ்க்கானும் பாடலாகப் பெய்துள்ளார்:

வெய்யற்ே றறையதுதான் வீங்கிளவே னிற்பருவம் தைவருதண் தென்றலணை தண்கழுநீர்த் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயா ழொலியினதாய் ஐயர்திரு வடிநீழ லருளாகிக் குளிர்ந்ததே.

-பெரிய, திருநாவுக்கரசு நாயனர் புராணம்: 98.

அடுத்து, சேக்கிழார், பக்தி நிறைந்த நல்நெஞ்சு வாய்ந்த துாய தொண்டர் என்பதனை முன்னர்க் கண்டோ மன்றாே? அதன்படியே அவர் காணுகின்ற காட்சிகளும் கேட்கின்ற ஒலி களும் இறைவனையே நினைவூட்டுகின்றன. ஒசை ஒலியெலாம் ஆய்ை நீயே” என்பது அப்பர் தேவாரம். மேலும், திருநீற்றுப் பற்று நிறையவுடையவர் சேக்கிழார். திருநாவுக்கரசு நாயனர் புராணத்தில், திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றினர்’ என்பர் சேக்கிழார். ஏளுதிநாத நாயனர் புராணத்தில், அதிசூரன் மெய்யில் வெண்திரு நீறும் அகத்தில்