பக்கம்:உருவும் திருவும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 87

கறுப்பும் (வஞ்சகம்) கொண்டு வந்தபோது ஏதிைநாத நாயனர் அவனைக் கொல்லாது விடுத்ததோடு தாமும் அவன் கைவாளிற் கொலைப் பட்டார் என்ற செய்தியினைக் கூறு கின்றார் :

கண்டபொழுதே கெட்டேன் முன்பிவர்மேற் காளுத வெண்திருநீற் றின்பொலிவு மேற்கண்டேன் வேறினி என் அண்டர்பிரான் சீரடியார் ஆயினர் என்றுமனங் கொண்டிவர்தங் கொள்கைக் குறிவழிகிற் பேன் என்று.

-பெரிய. ஏனதிநாத நாயனர் புராணம்: 38.

இங்கு மற்றாென்றும் கருதத்தக்கது. சேக்கிழார் அமங்கலமான செய்தியினையும், தம் மனத்தாலும் எண்ண முடியாத செய்தியினையும் கூறுவதற்கு மனம் ஒருபடார். அடியவர் பகைவரின் வாளால் வெட்டப்பட்டனர் எனக் கூறுவதற்கு மனம்வராத சேக்கிழார், அதனை வேறு முறையில் அக் கருத்துப் புலப்படக் கூறியுள்ளார். சான்றாக. ஏதிை நாயனர் அதிசூரனின் வஞ்சத்தால் மாய்க்கப் பெற்றதனே,

முன்கின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்

என்றும், மெய்ப்பொருள் நாயனர், முத்தநாதல்ை வெட்டப் பட்டபோது, புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில் பத்திரம் வாங்கித் தான் நினைந்த அப் பரிசே செய்ய என்றும் கூறியுள்ளமை காண்க. வானம் இருண்ட தைச் சொல்லவந்த சேக்கிழார் தம் இறையன்பு புலப்பட,

பஞ்சின் மெல்லடிப் பாவையருள்ளமும் வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும் அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் கெஞ்சம் என்ன இருண்டது நீண்டவான்

-பெரிய தடுத்தாட்கொண்ட புராணம் 159,