பக்கம்:உருவும் திருவும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 உருவும் திருவும்

என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திருவாரூர்த் திருக் கோயிலில் பரவை நாச்சியாரைக் காண்கின்றார் சுந்தரர். கண்ட அளவில் தாம் கொண்ட வியப்பினைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார் :

கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேனென்று அதிசயித்தார்.

-பெரிய, தடுத்தாட்கொண்ட புராணம்: 140.

இவ்வாறு சேக்கிழார் பாடியுள்ளவை கொண்டு உலகியற் பொருள்களை எங்குமாய் எல்லாமாய் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லையறு பரம்பொருளாகவே அவர் காண்கின்றார் என்பது

தெரியவரும்.

இயற்கை வருணனையிலும் சேக்கிழார் தம் கவிப் புலமை யினைக் காட்டியுள்ளார் என்பது கீழ்வரும் பாட்டால் அறிய லாகும் :

கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகம்காட்ட மருங்குவளர் கதிர்ச்செந்நெல் வயப்புரவி முகம்காட்டப் பெருஞ்சகடு தேர்காட்ட வினைங்கர்ஆப் பொலியிறங்க நெருங்கிய சாதுரங்கள்.பல நிகர்ப்பனவாம் நிறைமருதம்.

-பெரிய. திருநாவுக்கரசு நாயனர் புராணம்: 6.

இடத்திற்கேற்ற உவமையினைக் கையாளுவதிலும் சேக் கிழார் ஒரு சிறந்த புலவர் என்பதனைக் கண்ணப்ப நாயனர் புராணங்கொண்டு அறியலாம். காளத்தி மலையில் குடுமித் தேவரைக் கண்டு காதல் பொங்கி நின்ற திண்ணப்பர் இறை வனைப் பற்றிக்கொண்ட பான்மையினை வங்கினைப்பற்றிப்