பக்கம்:உருவும் திருவும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 89

போதா வல்லுடும் பென்ன நீங்கான்’ என்ற தொடரால் புலப்படுத்தியுள்ளார். திண்ணப்பர் வேட்டுவ மரபினர். எனவே, அவர் சாதிக்கியைந்த தொழில் வேட்டையாடுத லாகும். அதுபோது அவர்கள் காணும் உடும்பின் நிலையினையும் செயலினையும் வைத்தே சேக்கிழார் திண்ணனின் செயலை விளக்கியிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

ஆனய நாயனர் புராணத்தில் கார்ப் பருவத்தின் வர வினைக் கவினுறப் புனைந்து பாடியுள்ளார் சேக்கிழார். கீழ்க் காணும் அப்பாடலில் அணியழகு புலப்படும் மாட்சியினைக் காணலாம்.

லேமா மஞ்ஞை ஏங்க கிறைக்கொடிப் புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லை கோபம்வாய் முறுவல்காட்ட ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலரீ ரரங்கி லாடக் காரெனும் பருவ கல்லாள் .

-பெரிய. ஆனய நாயனர் புராணம்: 19.

மேலும் ஆளுய நாயனர் புராணத்தில் இசைபற்றிய செய்தியினையும், குறிப்பாகப் புல்லாங்குழல் அமைக்கும் இலக்கணத்தையும், வாசிக்கும் முறைமையினையும் நன்கு உணர்த்திக் காட்டுகின்றார்.

இளையான்குடி மாற நாயனர் புராணத்தின்வழி அடிய வர்க்கு விருந்தோம்பும் சிறப்பினை விவரித்துக் கூறியுள்ளார்.

செல்விருந் தோம்பி வருவிருந்து பாாத்திருப்பான் கல்விருந்து வானத் தவர்க்கு.

-திருக்குறள்: 86.

என்றார் வள்ளுவர். அம் முறையிலேயே மாரிக்கால இரவினில் மழை கொட்டும் வேளையில்வந்த சிவனடியார் அமுதுசெய்ய,

வித்திய நெல் கொணர்ந்து அடிசிலாக்கி அன்புடன் அளித்த சிறப்புப் பேசப்படுகின்றது.