பக்கம்:உருவும் திருவும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 உருவும் திருவும்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.

-திருக்குறள்: 85.

என்ற குறளுக்கு விளக்கம் தருவதுபோல் இளையான் குடிமாற நாயனரின் வாழ்வு அமைந்திருந்தமையைப் பெரிய புராணம் காட்டுகின்றது.

பெண்ணின் பெருமையினைப் போற்றிப் புகழ்வது பெரிய புராணமாகும். காரைக்காலம்மையார் வரலாற்றின் வழி இறைவனின் அன்பே ஈடு இணையற்றது என்பதனைச் சேக்கிழார் உணர்த்துகின்றார். காரைக்காலம்மையார் இறைவனிடம் வேண்டும் வரத்தினைச் சேக்கிழார் பின்வரும் அழகிய பாடலில் தந்துள்ளார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டுகான் மகிழ்ந்து பாடி அறவாரி ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

-பெரிய. காரைக்காலம்மையார் புராணம்: 60.

இதுபோன்றே பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் மனேவி மங்கையர்க்கரசியின் சைவநெறித் தொண்டினையும் போற்றிப் புகழ்ந்துள்ளார் சேக்கிழார். பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் அருளால் தம் கணவன் நின்றசீர் நெடுமாறன் என வழங்கும் கூன்.பாண்டியனைப் பரசமயக் குழியினின்று கடைத்தேற்றிப் பழம் பெரும் சமய மாம் சைவ சமயத்திற்குக் கொணர்ந்த பெருமைக்கு உரியவர் ஆகிறார். இத் தனிப்பெரும் திருத்தொண்டினை நன்குணர்ந்த சேக்கிழார் :

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்

வளவர் திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத் திருமடங்தை கன்னி நாடாள்

தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை