பக்கம்:உருவும் திருவும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கம்பன் கட்டிய கலைக்கோயில்

தமிழ்க் காப்பிய உலகில் தனக்கெனத் தனிச் சிறப்பான ஒர் இடத்தினைப் பெற்றிருப்பது கம்பராமாயண மாகும். கம்பளுல் தமிழ்க் கவிதையுலகு பெருமை பெற்றது: தமிழால் கம்பன் உயர்ந்தான். ‘கல்வியிற் பெரியர் கம்பர்’, ‘கவிச்சக்கர வர்த்தி கம்பர், கம்பன் வீட்டுள் ஒரு சிறு புன் கட்டுத்தறியும் கவி செய்யும். கம்பனரிடைப் பெருமை யுளது முதலிய தொடர்கள் கம்பன் பெருமையினை நன்கு பறைசாற்றுவன வாகும். மேலும்,

அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கன்று அமுதம் ஈந்த தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தன்னை நாட்டி கம்பங்ா டுடைய வள்ளல் கவிச்சக்கர வர்த்தி பார்மேல் நம்புபா மாலையாலே நரர்க்குமின்று அமுதம் ஈந்தான்

இம்பர் நாட்டில் செல்வமெலாம் எய்தி அரசாண் டிருந்தாலும் உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு நீழல் இருந்தாலும் செம்பொன் மேரு அனையபுயத் திறல்சேர் இராமன் திருக்கதையில் கம்பங்ாடன் கவிதை யிற்போற் கற்றாேர்க்கு இதயம் களியாதே என்றும் செவிவழிச் செய்திகளாக வழங்கிவரும் பாடல்கள்

கம்பன்தன் கவிச்சிறப்பினை வெளிப்படுத்தும்.

ஹோமர் எழுதிய இலியட்டினும் (iliad), வெர்ஜில் எழுதிய ஈனியட்டினும் (Aenid), மில்டன் எழுதிய துறக்க