பக்கம்:உருவும் திருவும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கட்டிய கலக்கோயில் 93

நீக்கத்தினும் (Paradise Lost), வியாசர் எழுதிய பாரதத் தினும், வால்மீகி எழுதிய ஆதி இராமாயணத்தினும் சிறந்தது கம்பன் கட்டிய காவிய மாளிகையாம் என்பர். இந்நூலிற்குக் கம்பன் வழங்கிய பெயர் ‘இராமாவதாரம்’ என்பது. இதனை ‘இராமாவதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை’ என்ற பாயிரச் செய்யுளின் பகுதியால் அறிய லாம். கம்பன் தமிழ்மொழியிலும், தென்னுட்டின் பிறமொழிகளிலும், வடமொழியிலும் .ெ ப. ரு ம் பு லமை பெற்றிருந்தான் என்பதனை, அவன் இயற்றிய காவியங்கொண்டு தெளியலாம். இராமனைக் கு றி த் து க் கம் பன். தென்சொற் கடந்தான், வடசொற்கலைக்கு எல்லை தேர்ந் தான்’ என்று கூறியுள்ள தொடர் அவனுக்கும் பொருத்த மாகும். இயற்கையின் இனிய பெற்றியினை ஈடும் இணையுமற்ற முறையில் வருணிக்கும் திறம், பல்வேறு கதாபாத்திரங்களின் மனவியல்புகளைப் பழுதற வடித்துக்காட்டும் வன்மை, இசை நாடகம் முதலிய கலைகளை நுனித்துணர்ந்த மாட்சி, பிறந்த பொன்னடாம் தமிழ்நாட்டின் மீதும், நாட்டின் பண்பாடு நாகரிகம் கலை முதவியவற்றின் மீதும் அவன் கொண்ட பற்று, நன்றி மறவா நல்லுள்ளம், விருத்தப்பாவினை வகைபெறக் கையாண்டு பல்வேறு கதிகளையும் சந்தவின்பத் தினையும் புலப்படுத்தும் புலமை, நாடகபாவத்தில் கதையினை நடத்திச் செல்லும் அரிய திறன் முதலிய இன்ன பிற சிறப்புக்கள் எல்லாம், கம்பன் கவிதையில் கவினுறத் துலங்கு வதனைக் காணலாம்.

இனிக் கம்பன் கட்டிய கலைக்கோயினுள் புகுந்து

காண்போம்.

சிறந்த கவிதை, வளமான நீரோட்டத்தைப் போல் இருக்கவேண்டும் என்பதனைக் கம்பன் ஒரு பாடலில் சிறப்புற விளக்கியுள்ளான். அப்பாடல் வருமாறு : புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற் ருகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச்