பக்கம்:உருவும் திருவும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

書 曹

94 உருவும் திருவும்

சவியுறத் தெளிந்து தண்ணென் றெழுக்கமும் தழுவிச் சான்றாேர் கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்.

-கம்ப. ஆரணிய. பஞ்சவடிப் படலம்: 1.

கம்பன் தன் கற்பனை, உள்ளத்தை அள்ளும் நீர்மைத்து: காட்சியினை மனத்திரையில் படம்பிடித்துக் காட்டும் நிலைமைத்து. இயற்கையின் பேரழகிலே நெஞ்சைப் பறி கொடுத்த நிறைகவிஞளும் கம்பன், மருத நிலத்தைப் படிப் போர் மனங்கொள்ளுமாறு வருணித்துள்ளான். வற்றாதி வளம் கொழிக்கும் சோலையில் கோலமயில்கள் தோகை விரித் தாடுகின்றன; செந்தாமரைப் பூக்கள் விளக்குகளாக விளங்கு கின்றன; மேகங்கள் முழவொலி முழங்குகின்றன: குவளே மலர்கள் கண் விழித்து இமைகொட்டாமல் நோக்குகின்றன: தெள்ளிய அலைகள் திரையாக எழிலுறப் பொலிகின்றன. மழலை வண்டினத்தின் ரீங்காரம் மகரயாழின் இசையாக ஒலிக்கின்றது. இத்தகு நிலையில் மருதநில மங்கை மாண் புறப் பொலிகின்றாள் என்று கம்பநாடன் கற்பனை செய் கிருன்:

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கங் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளை கண்விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ.

-கம்ப. பால. நாட்டுப் படலம்: 4.

கம்பன் வடமொழிக் காதையைப் பாடினலும் தீந்தமிழ் நாட்டை மறந்தானில்லை. தமிழ்நாட்டுப் பண்பும் பழக்க வழக்கங்களும் அவன் பாடலில் அப்படியே இடம் பெற்றுள் ளன. கோசல நாட்டைப் பாட வந்த கவிஞன், காவிரி நாடன்ன கழனி நாடு’ என்று கூறுகின்றன். வடமொழியில் வால்மீகி, சீதையும் இராமனும் திருமணத்திற்கு முன்னர்