பக்கம்:உருவும் திருவும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கட்டிய கலக்கோயில் 95

ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டதாகக் கூறவில்லை. ஆனல், பழந்தமிழ் மரபினை நன்குணர்ந்த கம்பன், தான் தரும் காப்பியம் தமிழ் மக்களுக்கு என்பதனை நன்குணர்ந்து, கடிமணம் புரிந்துகொள்வதற்கு முன்னதாகச் சீதையையும் இராமனையும் சந்திக்க வைத்து, இருவர் தம் உள்ளமும் காதலால் கட்டுண்டதாகக் குறிப்பிட்டுள்ளான்.

பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை யொருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்.

-கம்ப. பால. மிதிலைக்காட்சிப் படலம்: 37.

இதுபோன்றே வாலியை இழந்த தாரையின் கைம்பெண் கோலத்தைக் கூறவந்த கம்பனின் சொற்சித்திரத்தில் தமிழ் நாட்டின் கைம்பெண் கோலமே இடம் பெற்றுள்ளது.

கம்பன் தந்த இராமாயணத்தைக் ‘கம்பநாடகம்’ என்று அறிஞர் கூறுவர்: நாடகப் பாத்திரங்களின் உரையாடல் களிலும், அவர்கள் விம்மும் உணர்ச்சியோடு பேசும் பாகங் களிலும், கதை வளர்ந்துகொண்டே போவதில் ஆங்காங்கே நிகழும் நாடக பாவம் நிறைந்த சம்பவங்களையும் கட்டங் களையும் சித்தரிப்பதில்தான், கம்பனின் கவிதை ஈடும் இணையு மற்றுப் பொலிகின்றது என்பர். இரணியன் வதைப்படலம் இதற்குச் சிறந்த சான்றாக இலங்குகிறது. இது போன்றே இந்திரசித்து இலக்குவைேடு போர்செய்து விட்டுப் பல துன்பங்களுற்று இராவணனை வந்தடைகிருன். நிகழ்ந்தது உரை எனக் கேட்ட தன் தந்தையிடம், “குலம் செய்த பாவத் தாலே கொடும்பகை தேடிக் கொண்டாய்’ என்று கூறி, ஆசைதான் அச்சீதைபால் விடுதியாயின் அனையவர் சீற்றம் தீர்வர்; போதலும் புரிவர்: செய்த தீமையும் பொறுப்பர்;