பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை களுக்கு ஆளாகி இவ்வுலக வாழ்க்கையை நீத்த செய்தி கேட்டுத் திடுக்கிட்டு, இவ்வுலக இன்பத்திற் பற்றற்று ஒழுகத் தலைப்பட்டாள். 46 182 ஆடவரி கண்டா லகறலு முண்டோ பேடிய ரன்றோ பெற்றியி னின்றிடின்' என்று சுதமதியாற் பாராட்டப்பட்ட இவள் அழகின் சிறப்பை நினைந்து, இவளைத் தகாத ஒழுக்கத்திற்கு ஆளாக்க முயன்ற இவள் அன்னையின் தாயாகிய சித்திராபதி என்பாள், 'பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில், யாழினம் போலு மியல்பினம்' என்றும் நறுந்தா துண்டு நயனில்காலை, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்' என்றும் தங் குல ஒழுக்கத்திற்கு ஏற்ப நினைத்து ஒரு தோழி மூலமாக இச்செய்தியை மாதவிக்குத் தெரிவித்தனள். அது கேட்ட மாதவி "மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்த லல்ல தியாவதுந் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்" " என்று மறுத்து உரைத்தனள். இந் நிலையில், இருமுது குரவரையும் இழந்தமையால் மணிமேகலைக்கு நேர்ந்த துன்பத்தை ஆற்றுதற் பொருட்டுச் சுதமதி யென்னும் தோழி, 'உபவனம்' என்னும் ஒரு பூஞ்சோலைக்கு அவளை அழைத்துச் சென்றாள். இவள் கட்டழகின் மாண்பைக் கேட்ட அந்நகரத்து அரச குமாரனாகிய உதயகுமரன் என்பான், காம பரவசனாய் அவ்வுப வனத்திற் சென்று பளிக்கறையுட் புகுந்திருக்கும் மணிமேகலையைப் பற்றிப் பலவாறு பாராட்டிச் சுதமதி யால் தெருட்டப்பட்டு மீண்டும் அவளை யடையலாம்