பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை என்னுந் துணிவுடன் திரும்பினான். இந்நிலையில் உதயகுமரன் காட்சியில் மணிமேகலைக்குச் சிறிதளவு அவன்பால் உள்ளஞ் சென்றது. இதனை அவள் ஒளியாமல் தோழியாகிய சுதமதியை நோக்கி, "கற்புத் தானிலள் நற்றவ வுணர்விலள் வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென் றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம் இதுவோ அன்னாய் காமத் தியற்கை' என்று கூறிய செய்தியாலும், பின்னர் உதய குமரன் காஞ்சனனால் வெட்டுண்டு இறந்த பொழுது மனங் கலங்கி, "உவவன மருங்கில் நின்பா லுள்ளக் தவிர்விலே னாதவீன். 188= நின் இடர்வினை யொழிக்கக் காயசண்டிகைவடி வானேன் காதல

என்று இரங்கிப் புலம்பினமையாலும் அறியலாம். இங்ஙனம் உதயகுமரனால் இழித்து உரைக்கப்பட்டும் அவள் உள்ளம் சிறிது காதலித்ததற்குக் காரணம், பண்டைப் பிறப்புக்களில் இவ்விருவரும் கணவனும் மனைவியுமாக வாழ்ந்துவந்த தொடர்பென்று ஆசிரியர் கூறுகின்றார். காமத்தீச் சிறிதாகப் பற்றினும் பெரிதாகி வெதுப்பும் ஆதலின், அத்தொடர்பி னின்றும் ஒழித்தற்கு மணிமேகலையை அவள் குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் யாரும் அறி யாதபடி எடுத்து, இலங்கையிலுள்ள மணிபல்லவம் என்னுந் தீவிற்குக் கொண்டுவந்து புத்தபீடிகையைத்