பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தமிழும் தமிழ்ப் பணியும் எத்துணை நாட் செல்லும்?ஆ ! எம் நகரத்து வைசியச் செல்வருள் ஒருவர் மனங்கொள்வாராயின் அவருதவி யே இதற்குக் கண்டு மிகுவதாமே! தமிழ்ச் சுவைக்கு அவா வுற்றுச் சுந்தரர் மாணிக்கவாசகர் முதலிய அருட் பெருங் கவிகளை இரந்த சிவபிரானார்க்குத் திருக் கோயில் புதுக்க எம்மவருள் ஒரு குடும்பத்தார் தனிமை யிற் பதினைந்து நூராயிரங்களுக்கு மேற் செலவிட்டிருக் கின்றனரே! அத்தகையார் அப் பெருமானுக்கு இன் சுவை யமுதாவது இத்தமிழென உணர்வரேல் இதற்கு ஒரு நூறாயிரம் உதவல் பெரிதாகுமோ? 39 இச்சோழவள நாட்டில் அளவிறந்த நிலப் பகுதி களையுடைய பெஞ் செல்வர்கள் பலர் இருக்கின்றனரே! வேற்று நெறியிற் கணக்கிறந்த பொருள்களை வாரி யிறைக்க மனம் ஒருப்படும் அவர்கள் இன்னோரன்ன தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு உதவி, கிடைத்தற் கரிய புகழையும் புண்ணியத்தையும் கைப்பற்ற இது காறுந் தாழ்த்திருந்த லென்னையோ! தினைத்துணை நன்றியை யும் பனைத்துணையாக ஏற்றுக்கொண்டு பாராட்டும் இச் சங்கத்தின் பயன்றரு குணத்தை யுணர்ந்த நீவிர், இதற் குப் பனைத்துணை உதவுவீராயின் இது கூறும் புகழுரை யெல்லாம் நும் மேலவாமல்லவா! இந் நாட்டுச் செல்வர் களாகிய நும்மனோர் உள்ளங்களும் எம் தன வைசி யப் புண்ணிய சீலர்கள் உள்ளங்களும் இச் சங்க வளர்ச்சியில் ஒன்றுபட்டுப் பொருளுதவி புரிந்து மகிழப் பெருங்கருணைத் தடங் கடலாகிய இறைவன் திருவருள் பாலிப்பாராக!