பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$40 ஐயன்மீர் ! உரைநடைக் கோவை 7. தொகுப்பும் வாழ்த்தும் இதுகாறுங் கூறியவற்றால் கல்வி மக்களுக்கு இன்றியமையாத தென்பதூஉம், அதனைத் தாய் மொழி யாகிய தமிழ் மூலம் பயிலல் வேண்டுமென்பதூஉம், தமிழின் தொன்மையும் சிறப்புக்களும் தொல்காப்பிய முதலிய இலக்கண நூல்களானும் பலவகை இலக்கிய நூல்களானும் சமய நூல்களானும் விளங்குமென் பதூஉம், தமிழ் பிரிதொன்றினின்றும் தோன்றாத் தனி மொழியென்பதூஉம், இதன்கணுள்ள அகப் பொருள் முறை வனப்புக்கள் சிறந்தன வென்பதூஉம், இஃது அறிவுமொழி யென்பதூஉம், இக் காலத்து இதன் நிலைமை இன்ன வென்பதூஉம், போலி முறை களைக்களைந்து இதனை வளர்க்கவேண்டுமென்பதூஉம், வளர்த்தற்குரிய வழிகள் மொழிப்பெயர்ப்பு ஆராய்ச்சி செய்யுணூல் உரைநூல் வரைதல் முதலியன வென்ப தூஉம், அத் துறைகளில் தலைப்படும் புலவர்களைப் பொருட்பரிசில் படடங்கள் அளித்துப் போற்றுதல் வேண்டுமென்பதூஉம், பண்டைப் புலவர்களின் இயல்பும் அவர்களைப் பாதுகாத்த வள்ளல்களின் இயல்பும் இன்ன வென்பதூஉம், புலவராற் பாராட்டப் படுதல் செல்வர்க்கு இன்றியமையாத தென்பதூஉம், இக்காலத்துத் தமிழ் வளர்ப்பான் எழுந்த சங்கங் களின் இயல்பு இன்ன வென்பதூஉம், பெரிய தனித் தமிழ்க் கல்லூரிகள் அமைத்துப் பன்னூறு மாண வர்க்கு உணவளித்துத் தமிழ் பயிற்றல் மென்பதூஉம், தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டு ஒன்று