பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உரைநடை வளர்ச்சி


உள்ளன. தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் சுமார் மூன்றாம் நூற்றாண்டாகலாம் என்று வையாபுரிப் பிள்ளையவர்கள் கூறுகிறார். அக்காலத்திலேயே செய்யுளின் விளக்கக் குறிப்புகள் செய்யுளின் அடியில் இணைக்கப்பட்டன என்றும் அவர்கள் கருதுகிறார்கள். பிற்கால நூல்களின் அடிக்குறிப்புகள்கூட அக்காலத்திலோ அன்றி அதற்குச் சிறிது காலத்திற்குப் பின்னரோ எழுதப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறாயின் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வழங்கிய உரைநடையை ஆராய்வதற்கு அவ்வடிக்குறிப்புகள் துணை செய்கின்றன. தவிர, பல்லவர்களின் முற்காலச் சாசனங்களின் தமிழ்ப் பகுதிகளையும் இக்கால உரைநடைக்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். சங்க கால இலக்கியச் செய்யுள் அடிக்குறிப்புக்களினின்றும் அக்கால உரைநடைக்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண் போம். இம்மூன்று நூற்றாண்டுகளில் தமிழ் நடையில் அதிக மாற்றமில்லை என்பதை அவை காட்டும்.

நற்றினை

இரண்டாம் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதுரஉம் ஆம். (155) பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது. (157) {gap}}வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய் தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம். (272) வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது உம் ஆம். (280) பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்கான்ம அறிந்து, பிறிது ஒன்றன் மேல் வைத்து 'பாலியேன் இன்று பேதைமை செய்தேன் எம்பெருமாட்டி குறிப்புணர்ந்து வழிப்படுவேனாவேன் மன்னோ' எனச் சொல்லியது. (386)