பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உரைநடை வளர்ச்சி


சோழர் காலக் கல்வெட்டுகளில் உரைநடை

சோழப் பேரரசின் வளர்ச்சிக் காலத்தில் அரசியல் அமைப்புக்களும் கிராம ஆட்சிமுறையும் தோன்றின. பல புதிய நில உறவுகளும் வகி விதிப்பு முறைகளும் நீதிநெறி முறைகளும் உருவாயின. பணப் புழக்கமும் அதிகரித்தது. இச்சூழ்நிலையில் தோன்றிய ஆணைகளையும் முடிவுகளையும் வெளியிட உரைநடை கையாளப் பெற்றது. கோயில் மதிற் சுவர்களில் ஆவணங்களை எழுதிவைக்கும் வழக்கம் முன்காலத்தை இடப் பெரிதும் அதிகமாயிற்று. இவ்வாவணங்கள் செம்பிலும் செதுக்கப்பெற்றன. முக்கியமான உரிமைகளை வரையறுத்துக் கூறும் ஆவணங்கள் தவிர, பொது மக்களிடையே நிகழும் ஒப்பந்த இசைவுத் தீட்டுக்கள் பனையோலை மீது வரையப்பட்டன. அக்காலத்துப் பனையோலை ஏடுகள் எவையும் தற்காலத்தில் கிடைக்கவில்லை. சோழர் காலத்தில் முற்காலப் பிராமி எழுத்துக்களும் வட்டெழுத்துக்களும் மறைந்து, புதிய சோழர் எழுத்துக்கள் தோன்றின. இவற்றின் எளிமை காரணமாக, எழுத்தறிவு பரவியது. உரைநடையின் போக்கை அறிவதற்காகக் கால வரிசைப்படி, சில சோழர் சாசனங்களைக் கீழே தருவோம். அவை கி.பி. 919 முதல் 245 வரையுள்ள காலத்தில் உரைநடை வளர்ந்துவந்த முறையைக் காட்டுவன.

உத்திரமேரூர்க் கல்வெட்டு

ஸ்வஸ்திரு மதுரைகொண்ட கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு பனிரண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம் இவ்வாண்டு முதல் எங்கள் ஊர் ஶ்ரீமுகபட்டி ஆணை இதனால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியம் காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட மும் ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அல்வக்குடும்பிலாரேய் கூடி கானிலத்துக்கு மேல் இதை நிலம் உடையான் தன் மனையிலே அகம் எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல் பட்டார் வேதத் திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர் என்னப் பட்டி