பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

19

ருப்பாரை அர்த்த செளிசமும் ஆத்ம செளசமும் உடைய ராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய்தொழிந்த பெருமக்களுக்கு அனைய பந்துக்கள் அல்லாதாராய் குடவோலைக்குப் பேர் தீட்டி சேரிவழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு பர்லனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வரும் சம்வத்ளர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோ நசி லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறுகுட வோலையும் ஏரி வாரியம் ஆ வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய் கின்ற மூன்று திறத்து வாரியமும் முன்னுற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரி பங்கள் இவ்வியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குட வோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரி யம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு ம் குடவோலையில் எழுதி பேர் இடப்படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்திற்கும் பொன் வாரியத்திற்கும் முப்பது குடும்பிலும் முப்பது குடவோலையிட்டு சேரி யால் ஒருத்தரை குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் அறுவர் பொன் வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பின்னை அவ்வாரியத் துக்கு குடவோலை இடப் பெறாதாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்னும் குட வோலை வாரியமேய் இடிவதாக தேவேந்திரன் சக்கிர வர்த்தி ரீவீர நாராயணன் ரீபராந்தக தேவர் ஆகிய பரகேசரிவர்மர் ஶ்ரீமுகம் அருளிச் செய்து வரக்காட்ட ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கெட்டு சிஷ்டர் வர்த்தித் திடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்துக்குச் சபையோம்.

இக்கல்வெட்டு கி.பி.919இல் முதற் பராந்தக சோழன் காலத்தில் வரையப்பட்டது. இது உத்திரமேரூர் சபையார் சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம் ஆகிய நிறைவேற்றுக் கழகங்