பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

21

பண்ணக்கடவதாகவும் இப்படிக் கூட்டம் செய்யுமிடத்து ஸ்ம்வத்ரை வரணமாக்ச் செய்யவும் மேற்பட நின்றாருண்டாகில் கிராமதுரோகிகளாய் இப்படி தண்டிதராகக் கடவர்களாகவும் இப்படி வியவஸ்தைப்படி கூட்டம் செய்யுமிவர்கள் நம்மூர் கடமை குடிமையும்

சபாவிநியோகமும் வரிக் கொள்ளுமிடத்து பிராப்தமான படிக்கு மேற்பட்ட வரி கொள்ளாதொழியக் கடவர்ர்களாகவும் சபாவிநியோகம் குடிமையுடன் கூட்டாதே தனியே வரிக்கொண்டு கணக்கனுக்கு நியோகமெழுதிக் குடுத்து நியோகப்படியே செலவழிக்கக் கடவ

தாகவும் செலவழிக்குமிடத்துக்கு ஒரு பொருளுக்கு இரண்டாயிரம் காசுக்கு மேற்பட்டதுண்டாகில் மஹா சபாநியோக மெழுதிக்கொண்டு செலவழிக்கக் கடவர்களாகவும் இப்படித் தவிரச் செலவழித்ததுண்டாகிலும் ஏற வரிக் கொண்டதுண்டாகிலும் வரிக் கோளுக்கு

நியோகம் எழுதின் சபை... க வாசறுதியாக ஒன்றுக்கு அஞ்சாக வந்த காசும் பேர்வழி சிகை கிடந்த பேர்க்ளிரட்டியாக வந்த காசும் தண்டி சபாவிநியோகத்துக்குச் செலவழிக்கக் கடவதாகவும், ஊர்க்கணக்கும் வாரியமும் குடும்பும் ஆண்டு மாறி நியோகப்படி நிற்கக் கட

வதாகவும் மூலபருஷையார்......மூவரின் வியவஸ்தை இவ்வூருடையர் திருவிரவீஸ்வரம் உடையார் கோயில் திரு நடை மாளிகையிலே இப்படிக் கல்வெட்டக் கடவதாக நிச்சயித்து இப்படி வியவஸ்தை பண்ணினோம் பணிப் பணியால் ஊர்க்கணக்கு சாத்தனூருடையான் பண்டித

பிரியன் எழுத்து இவை பணிப்பணியால் ஊர்க்கணக்கு சேய்ஞலூருடையான் அலங்காரப்பிரியன் எழுத்து இவை பணிப்பணியால் ஊர்க்கணக்கு இலங்கூருடையான் மூலபரிஷைப்பிரியன் எழுத்து இவை பணிப்பணியால் ஊர்க்கணக்குக் காட்டுடையனார் பட்டப்பிரி

யன் எழுத்து ஸ்வஸ்திஸ்ரீ

இக்கல்வெட்டில் காணப்படும் முடிவு, பண்டைய விதிகளில் சில மாறுதல்களைச் செய்கிறது. மாற்றிய விதியை மீறுவோருக்குத் தண்டனைகள் இவையெனச் சுட்டிக் காட்டுகிறது. முதல் பகுதியைத் திருத்தம் (amendment) எனவும், இரண்டாம் பிரிவைத் தண்டனைப்பகுதி (Penal clause) என்றும் கூறலாம். இவ்விதிகள் கிராமச் சபையினாலே இயற்றப் பெற்றன. அரசன் ஆணையினால் அன்று. விதிவகுப்பு முறைகளையும், அதனை மாற்றும் முறைகளையும் விதியினை மீறியவர்களுக்குத்