பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உரைநடை வளர்ச்சி


அதுக்கு நீர் முந்தா நாள் கொடுத்த லோக்கா பொன்கட்டி இ குக் குதென்று சொன்னேன். ஆனால் கட்டிக்கு இருநூத்தி எழுபத்திரண்டு வராகன் விலைக்குக் கொடுக்கிறீரா என்று கேட்டார். அதுக்கு நான் சொன்னது சிஞ்ஞோர் கேட்ட இருநூாத்தி எழுபத்தொண்ணே முக்கால் வராக னுக்கு உமக்கு சம்மதியிருந்தால் கொடும். அதுக்கு மேல் ஒரு காசு ஒசித்தலும் தேவையில்லை என்று சொன் னேன். அதுக்கு அவர் இருந்து கொண்டு இனிமேல் நீர் கொண்டு வந்து கொடுக்கப் போகிற வராகன் இப் பொழுது வழங்கில் ஆலம்புரவி வராகன் அல்லவோ கொடுக்கப்படுகிறது. அது ஏழே முக்காலேயரைக்கால் மாத்துயிருக்கிறது. அது எனக்குச் சம்மதி அல்ல. எட்டே வீசம் மாத்திற்கும் வராகன் கொண்டு கொடுத் தால் தமக்கு சம்மதியென்று சொன்னார். அதுக்கு நான் சொன்னது நீ பித்தளை வராகன் கொண்டு வந்து கொடுத் தாலும் வாங்கிக் கொள்ளச் சொல்லுகிறாயா யென்று சொல்லி பின்னை ஒரு உத்திரவு சொன்னார். என்ன சொன்னார் என்றால் நாங்கள் நேற்றய தினம் கோன்செல் கூடி கோன்சலில் தீர்த்த காரியம் என்னவென்றால் இனி மேல் இந்த ஊருக்குள்ளே எட்டு மாத்திற்குள்ளே குறைந்த வராகன் யாதாமொருத்தன் கொண்டு வரு கிறானோ அவன் கையிலே ஆயிரம் வராகன் அபராதமும் வாங்கிக்கொண்டு கொணக்கு முத்திரை போட்டு பின்னை யும் அவமானம் பண்ணுவோம் என்று தீர்த்தோம். காலமே சின்னதுரை பேர் விளங்கன் வந்தான். ஆள் கழுக்கு மழுக்கென்று மண்ணிலே எடுத்த வள்ளிக் கிழங்காட்டமாயிருக்கிறான். முகம் பரந்த முகமாய் ஆன வாகனனாயிருக்கிறான். அவன் சென்னப் பட்டணத் துக்குப் போயிருந்து வந்தவன். மீனாட்சியம்மை சத்திரத் திலே வந்து சொல்லியனுப்பினான். இந்த தடை பற்றி சி.சு. செல்லப்பா தமது நூலில் கீழ்க் டவாறு கூறுகிறார்: பிள்ளையின் நடை ரொம்பத் துடியாக இருக்கிறது. சுருக் சுருக் என்று தகவல்களை நமக்குக் குத்திச் சொல் விக் கொண்டே போகிறது. தகவல் தராத ஒரு வரி கிடையாது. இந்த நடை, தகவல் தருவதற்கும் வருணனைக்கும் பயன் பட்டிருக்கிறது. வருனனை மூன்று சொற்றொடர்களில்