பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உரைநடை வளர்ச்சி


சென்னை, கப்பம் கட்டி, கட்டியங்கூறி, காவடி துக்கிச் சேவடி தாங்கி, தன்மானமிழந்து தவிக்கிறதே இது தகுமா?

என்பது போன்ற தொடர் நடையாலும்,

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே காந்தாரமும், கனோசும், காமரூபமும், மாளவமும், சுர்ஜரமும், பிறவும் உருவாகாத நாட்களிலேயே அயோத்தியும், அஸ்தினாபுரமும், காசியும், அரித்துவாரமும் திவ்விய சேஷத்திரங்கள் ஆகாததற்கு முன்பே பூம்புகாரும், கொற்கை, தொண்டி, முசிறி எனும் பல்வேறு துறைமுகங்கள் கொண்டதாய் விளங்கியது எந்நாடோ? எந்த நாட்டிலே முரசு மூன்று, தமிழ் மூன்று வகை என்றும் தானை நால்வகை, போர் முறை பல்வேறு வகை, கருவிகள் பலப்பல என்றும் வகுத்து வைக்கப்பட்டு இருந்ததோ, எந்த நாட்டு முத்தும் பவளமும் பிற நாட்டுப் பேரரசர்கள் தமது காதலைப் பெற்ற கட்டழகியர்க்குக் காணிக்கையாக்கிக் களித் தனரோ...அந்த நாடு, அதன் எல்லைகள் வெட்டப்பட்டு, வேற்றாரால் கவரப்பட்டு, அதன் பண்பு பாழ்படும் வகையில்தான் மொழிக்கும், கலைக்கும் இடமளித்து விட்டு, இடர்பட்டு, இழிநிலை பெற்று, இயல்பு கெட்டு, எழில் குலைந்து, கொற்றம் அழிந்து, கோலம் கலைந்து, மற்றையோர் கண்டு எள்ளி நகையாடத் தக்க விதத்தில் மானமிழந்து, ஈனர்க்குக் குற்றேவல் புரிந்து கிடக்கும் எடுபிடியாக்கப்பட்டுள்ளது

என்பது போன்ற நீண்ட வாக்கிய நடையாலும் இளைஞர்களைக் கவர்ந்தனர். தி.மு.க. உரைநடை ஒரே போக்கினை உடையதல்ல என்பதை மேலே உள்ள எடுத்துக்காட்டுகளால் அறியலாம். கூற வந்த செய்திக்குத் தக்கபடி உரைநடை மாற்றப்படுகிறது. படித்த இளைஞர்களைக் கவர்வதற்கு ஏற்ற நீண்ட வாக்கியத் தொடர்கள், பாமரரைக் கவர்வதற்கு எளிய உவமானம், கதை கள் ஆகியவற்றுடன் கூடிய நடை, உணர்ச்சியைத் தூண்ட, பழம் பெருமையில் தமிழரை மிதக்க வைக்க அலங்காரச் சொற்கள் நிறைந்த நடை எனப் பலவகையான நடைகளை அவர்கள் கையாண்டுள்ளனர். இந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்து விட்டது. பிரச்சாரக் கருவியாக இந்நடை பயன்பட்டதே