பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

61


இச்சொற்களை அறிவியல் வல்லுநர்கள் புனையவில்லை. அறிவியல் அறியாத தமிழ் இலக்கியப் பண்டிதர்கள் புனைந்தார்கள். அறிவியலில் நுட்பமான வேறுபாடுகள் கொண்ட கருத்துக்களை ஒரே சொல்லால் குறிப்பிட்டார்கள். எனவே தெளிவுக்குப் பதில் குழப்பமே மிகுந்தது.

தற்போது அறிவியல் நூல்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில், ஆங்கிலத்தில் வெளியாகின்றன. இவற்றால் பெறப் படும் அறிவு தமிழில் கிடைப்பதில்லை தமிழில் அறிவியல் நூல்கள் குறைவாக இருப்பதற்குக் காரணம் அருங்கலைச் சொற்களைப் பற்றிய குழப்பமே. தமிழில் முடியும் என்ற நூலில் இக்கழப்பத்தைப் போக்க வழிமுறைகளை நானும் எனது நண்பர்களும் கூறி, ஒவ்வோர் அறிவியல் துறையிலும் இச்சிக்கலைத் தீர்க்கும் வழிகளையும் விளக்கியுள்ளோம்.

அறிவியல், உலகில் வளர்ச்சி மொழி பேசுகிற பன்னாட்டவர்களின் படைப்பு. அவரவர்கள் கண்டுபிடிக்கிற புதுமைகளையும், அவ்வந்நாட்டு மொழிகளிலேயே குறிப்பிடுகிறார்கள். கருத்துக்களை மொழிபெயர்க்கலாம். இடுகுறிகளை மொழி பெயர்க்க முடியாது. 'லாஸர்' என்ற ஒரு வகையான ஒளிக் கற்றையைச் குறிக்கும் சொல்லை மொழிபெயர்க்க முடியாது. ஆனால் அது எதனைக் குறிக்கிறது என்ற கருத்தைத் தமிழில் விளக்கலாம். சில சொற்கள் தமிழில் சில கருத்துக்களைக் குறிக்கலாம். அவை பழகிய கருத்துக்களே. ஆனால் எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் முதலிய துகள்களைக் குறிக்கத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால், உலகளாவிய அறிவியல் வளர்ச்சியில் இருந்து தமிழர்கள் துண்டிக்கப்படுவார்கள்.

இதனால் தமிழில் அறிவியலைப் பரப்ப முடியாது என்பது பொருளல்ல. உலகச் சொற்களஞ்சியத்தில் இருந்து சொற்களைத் தாராளமாக எடுத்துக்கொண்டு தமிழிலேயே விளக்கவுரைகளை, எழுதி மக்களுக்குத் தெளிவுபடுத்தலாம். இத் தகைய முயற்சிகள் தமிழை அழகில்லாமல் ஆக்கிவிடுவதாகத் தனித்தமிழ்வாதிகள் கூறுவார்கள். பழைய சொற்களைப் பயன்படுத்துவது மட்டும்தான் தமிழுக்கு அழகு தருகிறது என்று இவர்கள் நினைக்கிறார்கள். புதிய கருத்துக்கள், கருத்தமைப்புக்கள், வரையறைகள் எல்லாவற்றையும் தெளிவாக்கப் பழைய தமிழ்ச் சொற்களே போதும் என்பது இவர்கள் கருத்து. புதுமையைப் பழமை மூலம் காண்பது மிகத் தவறான தோர். அறிவுப் போக்காகும். இது புதுமையைத் தவறாக அறிந்துகொள்ள வகை செய்யும்.அறிவியல் அறிவுக்கும் பதிலாக, தவறான அறிவியல் கருத்துக்களை இம்முறை மீனத்