பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கலையின் நிதியாம் உரைவேந்தர் புலவர் உலகம் மகிழவரும் புகழ்சேர் ஒளவை எனும் பெயர்தான் குலவும் உரிமைதனக் காக்கிக் கூறும்அந்தத் திருப்பெயர்தான் நிலவும் புலமை மரபுக்கும் நிகழும் வண்ணம் பெயர் பொறித்த கலையின்நிதியாய் உரைவேந்தர் கல்வித்திறத்தைப் போற்றுதுமே. மொழியின் புலமை அது ஒன்றோ முறைமை தெரியும் வரலாற்று வழியும் தேர்ந்த பெருந்தகையார் வளமார்சைவ சித்தாந்தம் மொழியும் திறத்தில் தனிச் சிறப்பும் முனைப்பாய் எழுதும்திறத்துளே விழிபோல் இரண்டு பேராற்றல் விளங்கும் புலமைத் திருவுடையார். உர்ைகள் வரையும் திறத்தினிலே ஓங்கும் புகழ்சால் வேந்தரென உரைநூல் யாவும் தமிழுக்கு - . உற்றதுணையாய்ச் செய்தளித்தார் உரையும் பாட்டும் உடையவராய் உள்ளந்தன்னில் ஆட்சிசெயும் உள்ளத்து உவகை கொள்வோமே! - மகாவித்துவான் ம. அமிர்தலிங்கம்