பக்கம்:உலகத்தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. வினாத்தாள் விடவில்லை

டெஹ்ரானுக்கு தொண்ணூறு கிலோ துாரத்தில் பறக்கும்போது இப்படியொரு அறிவிப்பு வந்தது.

“டெஹ்ரானுக்குத் தொண்ணுாறு கிலோவில் இருக்கிறோம். ஆகவே இறங்கத் தொடங்குகிறோம். 31000 அடியிலிருந்து 19000 அடிக்குச் சில நிமிடங்களில் இறங்கிவிடுவோம். அவரவர் இடத்தில் அமர்ந்து, கச்சைகளைக் கட்டிக்கொள்ளுங்கள்” என்று அறிவிக்கப் பட்டது.

மிக உயரத்தில் இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக, முன்னதாகாகவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை இது பதிய வைத்தது. தன் உணர்ச்சிகளே , தன் நாவைக் கட்டி வைத்தால்தான் சட்டென்று உயரத்தில் இருந்து கிழே இறங்கினாலும் தீங்கு விளையாது. நிலையில் திரியாது பெருமையோடு வாழ முடியும் என்னும் தெளிவு பிறந்தது.

டெஹ்ரானைக் குறித்த நேரத்தில் அடைந்து விட்டோம். டெஹ்ரான் விமான நிலயத்தில், பயணிகள் தங்குமிடத்தில், இளைஞர் இருவர் முன் வந்து, “எவ்வளவு தூரம் செல்கிறிர்கள்?” என்று தமிழில் வினவினர். சென்னை எம். ஐ. டி. யில் பெளதிகத் துறை ஆசிரியராகவுள்ள திரு. வெங்கடேசன் ஒருவர்; மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகவும், மற்ற கேரம் சாடர்டு அக்கௌண்டண்டாகவும் பணியாற்றும் திரு சந்திரன் மற்றொருவர். இருவரும் 'புல்பிரைட்' உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு மேல்படிப்பிற்குச் செல்கிறார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/14&oldid=480375" இலிருந்து மீள்விக்கப்பட்டது