பக்கம்:உலகத்தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகப் பல்கலைக்கழகச் சேவை

51

செல்லும்போது திருமதி நாதனின் புடவையை வியப் போடு பார்த்தனர்.

சிற்றுண்டிச்சாலை யொன்றிற்குச் சென்றோம். உள்ளே சென்று உண்பதைவிட வெளியே இருந்து உண்பதற்கே அங்குள்ளவர்களுக்கு மோகம். நாங்களும் வெளியே, வண்ணக் குடைகளின் நிழலில் அமர்ந்து காப்பியருந்தினோம்.

இருட்டும் வேளையில் புறப்பட்டு ஜினிவாவிற்குத் திரும்பினோம். ஊர் வந்த சேர ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. தும்பும் தூசியும் குறைவாகவும், குளுமை நிறைந்தும் நாள் முழுதும் வீசிய மலைக்காற்று அலுப்பைக் கொடுக்காமல் காத்தது


8. உலகப் பல்கலைக் கழகச் சேவை

ஜூலைத்திங்கள் மூன்றாம் நாள் காலை 8-45 மணிக்கு, நண்பர் நாதன் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். நான் சிற்றுண்டி உண்டுவிட்டு, பெட்டியோடு ஆயத்த மாயிருந்தேன். ஒட்டலுக்கு கட்டவேண்டியதைக் கட்டி விட்டு வெளியேறினோம், நேரே நாதன் அலுவலகத் திற்குச் சென்றோம்.

திரு. சிதம்பரநாதன், ‘உலகப் பல்கலைக் கழகச் சேவை’ என்னும் உலக அமைப்பின் செக்ரடரி ஜெனரல். அந்த அமைப்பின் அலுவலகம் பழைய ஜினிவாவில் இருக்கிறது. அது அமைந்துள்ள தெரு குறுகலானது. நாதன் தம் காரை நிறுத்துவதற்காகக் குறுகிய தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்தார். கடைசியில் ஒரு கோடியில் இடம் கிடைத்தது. அங்கே நிறுத்திவிட்டு ஐந்து நிமிடம் நடந்து அலுவலகம் சேர்ந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/50&oldid=481000" இலிருந்து மீள்விக்கப்பட்டது