பக்கம்:உலகத்தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உலகத் தமிழ்


மண்ணாசை பிடித்த, ஆதிக்கவெறி பிடித்த நாட்டுத் தலைவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய ஐரோப்பிய நாடுகளிலே போர் முடிந்த வேளை. அப்பொழுது அனுபவித்த அவல நிலைக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. மற்றப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நிலையும் கொடுமையானதே; கடுமையானதே.

இதை அறிந்த நல்லோர் சிலர் கசிந்து உருகினர். தீயோரைத் திட்டிக்கொண்டே ஆறுதல் அடையாமல், அழிவிலிருந்து ஆக்கத்திற்கு உயர்த்த உறுதி கொண்டனர்: உழைக்க முன்வந்தனர். கட்டாயம் ஏதுமின்றி, விரும்பிக் கொடுக்கும் பணத்தையும் பொருள்களையும் திரட்டி, பஞ்ச நிவாரண வேலை, பட்டினி ஒழிப்புப்பணி, நோய் நீக்கும் மருத்துவ சேவை, தன்னுதவிக்கு உதவி, உடைக்கொடை, நூல் கொடை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தனர். இவ்வேறுபாடுகளைக் கவனிக்க, ஐரோப்பிய மாணவர் நிவாரணம் என்ற பெயரில் ஒரமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதன் மூலம் பலர், இத்தகைய மாணவர் தொண்டிலே குதித்தனர்.

எடுத்த எடுப்பிலே அன்னதானம்; உடைதானம்; மருந்துக் கொடை எப்போதும் கொடை கொடுத்துக் கொண்டிருப்பது கொடுப்போர்க்கும் நல்லதன்று; பெறுவோர்க்கும் நல்லதன்று. திடீர் ஆபத்தில் கொடை வாங்கலாம். விரைவில் அதிலிருந்து விடுபடவேண்டும்.தன் காலில் நிற்க வேண்டும்; தன் உழைப்பினால் வாழ வேண்டும்.

இரண்டாவது கட்டத்தில் அப்படியே ஏற்பாடு செய்தனர். உடை தைக்க, பழுது பார்க்க வேண்டிய கருவிகளைத் தந்து உதவினர். மாணவர்கள் ஓய்ந்த நேரத்தில் தங்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் உடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/53&oldid=481003" இலிருந்து மீள்விக்கப்பட்டது