பக்கம்:உலகத்தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகப் பல்கலைக்கழகப் சேவை

55

தைத்து உதவினார்கள். காலணி தைக்கவும் கருவிக் கொடை விடுதியைக் கட்டிக் கொடுக்கவில்லை. விடுதி கட்டுவதற்கான பொருள்களைத் தந்தனர். முறை தெரிந்த கட்டட வல்லுநர்களின் ஆலோசனையை அவர்களுக்கு ஈந்தனர். இவற்றையெல்லாம் பெற்ற மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொண்டு வறுமையினின்றும் பட்டினியிலிருந்தும் படிக்க முடியா மையிலிருந்தும் விடுபட்டு, தன்னம்பிக்கை பெற்று தன்னூக்கத்தைத் திரும்பப் பெற்று, தம் முயற்சியினால் மறுவாழ்வு- நல்வாழ்வு-பெற்றார்கள்.

ஐரோப்பிய மாணவர் நிவாரணம் (ஐ. மா. நி.) பெற்ற தொண்டு அனுபவமும், அமைப்பும் வீணாகாமல் தொடர்ந்து பற்பல நாடுகளில் பற்பல நெருக்கடிகளின் போது, கைகொடுத்து உதவின. இரண்டாம் உலகப் போரின் போதும், அதற்குப் பிறகும், அதன் சேவை அறிந்தது. ஐரோப்பவிற்கு அப்பால் அவதிப்பட்ட நாடுகளின் மாணவர்களுக்கெல்லாம் அதன் நீண்ட கரம் எட்டி உதவியது. 1920ஆம் ஆண்டில் ஐ. மா.நி என்ற பெயரில் முளைத்த இச் சேவா நிலையம் இன்று, உலகப் பல்கலைக் கழகக்சேவை (உ.ப.சே.) என்ற புதுப் பெயரில் உலகத்தின் அறுபத்தெட்டு நாடுகளில் விழுதுவிட்டு, நிழல் தந்து துணை புரிகிறது. உ. ப. சே.யின் பொது அவை ஈராண்டுக்கு ஒரு முறை கூடும்; வெவ்வேறு நாடுகளில் கூடும். இவ்வாண்டு (1970) உ. ப. சே. யின் பொன் விழா ஆண்டு. பொன் விழா ஆண்டில் கூடும். பொது அவைக் கூட்டம், சென்னையில் கூடிற்று. எழும்பூர் ஸ்பர்டாங் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் கூடிற்று. ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல் 29ஆம் நாள் வரை கூடி, அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/54&oldid=481004" இலிருந்து மீள்விக்கப்பட்டது