பக்கம்:உலகத்தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உலகத் தமிழ்


இரண்டாண்டிற்கான திட்டங்களை வேலை முறைகளை முடிவு செய்தது.

இக்கட்டடத்தைப் பற்றிச் சில சொற்கள். இது ஐந்து மாடிக் கட்டடம். பதினாறு இலட்ச ரூபாய்க் கட்டடம். எதற்கு இது? உ. ப. சே.யின் சென்னை மையம் இது. இங்கே என்ன உண்டு? மருத்துவ சோதனை நிலையம் உண்டு. ‘எக்ஸ்ரே’ படம் பிடிக்க, பல் வைத்தியம் செய்ய, கண் சோதனை செய்ய, காது சோதனை பார்க்கக் கருவிகள் உள்ளன. சென்னையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் இந் நிலையத்தை நடத்துவார்கள். மருத்துவ சோதனை நிலையம் மட்டுமல்ல இது. நூலகம் இருக்கும்; கலைக்கூடம் இருக்கும்; மாணவர் விடுதியுண்டு; வங்கி வசதியும் உண்டு.

கட்டடத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது தெரியுமா? டென்மார்க் அரசு, எல்லாவற்றிற்குமாகப் பதினெட்டு இலட்சம் ரூபாய் வழங்கிற்று. தளவாட சாமான்களுக்கான இரண்டு இலட்சம் ருபாயை நாம் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஆ! என்ன தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்!

ஜினிவாவின் சிறப்பைக் காட்டிக் கொண்டிருந்தவன் திடீரென முன்னறிவிப்பின்றி, பொத்தெனச் சென்னையின் தொல்லையில் உங்களை இறக்கிவிட்டேனா? அதிர்ச்சி அடையாதீர்கள்!

மீண்டும் ஜினிவாவிற்குப் பறந்து செல்வோம். இதோ, உ. ப. சே. யின் அலுவலகம். நானும் சிதம்பரநாதனும் உள்ளே நுழைந்தபோது காலை 9.25 மணி. அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் அவரவர் இடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/55&oldid=481005" இலிருந்து மீள்விக்கப்பட்டது